பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

வினை மேல் சென்று செய்யப்படும்-நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும்.

[செறுத்தல்-ஒட்டிப்போதல். மீதூர்ந்து வருதல்-மேல் வருதல். மேல் விழுந்து- முன் சென்று-விரைந்து. படும் என்பது வேண்டும் என்னும் பொருள் தந்து நின்றது.]

இஃது, உயிரானது கழிவதன் முன்னே நல்வினையைச் செய்ய வேண்டு மென்றது. ௩௩௫.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

இ-ள்:- ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை- "ஒருவன் நேற்று உளனாயிருந்தான் இன்று இல்லையாயினான்" என்று சொல்லும் பெருமையை, இவ்வுலகு உடைத்து-இவ்வுலகம் உடைத்து.

["நெருநல் உளனொருவன் இன்று இல்லை” என்பது உலகத்தார் கூற்றாகக் கூறப்பட்டுள்ளது.]

இது, யாக்கை நிலையாமை கூறிற்று. ௩௩௬.

ருபொழுதும் வாழ்வ தறியார். கருதுப
கோடியும் அல்ல பல.

இ-ள்:- ஒரு பொழுதும் வாழ்வது அறியார்-ஒரு பொழுதளவும் (தம் உயிர்) நிலைக்குமென்பதனை அறியாராயிருந்தும், கோடியும் அல்ல பல கருதுப- (தமது வாழ்நாள்கள்) கோடியும் அல்ல பலவாகக் கருதுவர் (உலகத்தார்).

மேல், ஒருநாள் உளனானவன் பிற்றை ஞான்று செத்தானொன்றார்; ஈண்டு, ஒருபொழுதளவும் உயிர் நிலையாகா தென்றார். ௩௩௭.

௧௨௨