பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்ந்நன்றி யறிதல்

இ-ள்:- நன்றி மறப்பது நன்றன்று - (பிறர் செய்த) நன்மையை (என்றும்) மறப்பது நன்றன்று;. நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - (பிறர் செய்த தீமையை அன்றே மறப்பது நன்று.

இது, பிறர் செய்த நன்றியை என்றும் மறக்கலாகா தென்றும் தீமையை உடனே மறக்க வேண்டு மென்றும் கூறிற்று. ௧0௨.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

இ-ள்:- செய்யாமல் செய்த உதவிக்கு - (முன் ஓர் உதவி தாம்) செய்யாதிருக்க (த்தமக்கு ஒருவன்) செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - இவ்வுலகமும் சுவர்க்கமும் நிறையாற்றுதல் அரிது.. [நிறை ஆற்றுதல்-நிறையில் சமமாதல்.]

இது, தம்மிடம் ஓர் உதவியும் பெறாதார் தமக்குச் செய்த உதவி இப்புவியினும் சுவர்க்கத்தினும் பெரிதா மென்றது. ௧0௩.

யன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்,
நன்மை கடலிற் பெரிது.

இ-ள்:- பயன் தூக்கார் செய்த உதவி நயன் தாக்கின் - ஒரு பயனைக் கருதா ராய்த் தமக்குச் செய்த உபகார(த்தினால் உண்டாய) நன்மையை ஆராயில், நன்மை கடலின் பெரிது -(அந்) நன்மை கடலினும் பெரிது. .

இஃது, ஒரு பயனைக் கருதாது செய்த உதவி கடலினும் பெரி தென்றது. ௧0௪.

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

இ-ள்:- காலத்தினால் செய்த நன்றி - (உதவி வேண்டும்) காலத்தில் செய்த உதவி, சிறிது எனிலும் - (தான்) சிறிதாயிருந்ததாயி

௩௯