உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

நடங்கவின்கொ ளம்பலத்து நாயகச்செந் தேனின்

இடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் -கடங்கார் பருமா ளிகைமேற் பகடுகைத்த கூத்தன் திருமா ளிகையமைத்தான் சென்று.

எவ்வுலகு மெவ்வுயிரு மீன்று மெழிலழியாச்

செவ்வியாள் கோயிற் றிருச்சுற்றைப்-பவ்வஞ்சூழ்

எல்லைவட்டந் தன்கோற் கியலவிட்ட வாட்கூத்தன் தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று.

44

வாளுடைய பொற்பொதுவின் (மன்னனிடமாகும்)

45

ஆளுடைய பாவைக் கபிடேகம்-வேளுடைய

பொற்பினால் பொன்னம் பலக்கூத்தன் பொங்குகட வெற்பினான் சாத்தினான் வேறு.

சேதாம்பல் வாய்மயிற்குத் தில்லையந் தேவிக்குப்

46

பீதாம் பரஞ்சமைத்தான் பேரொலிநீர்-மோதா

அலைகின்ற வெல்லை யபயனுக்கே யாக

மலைகின்ற தொண்டையார் மன்.

செல்வி(திருத்தறங்க டென்னகரித் தில்லைக்கே

47

நல்லமகப் பாலெண்ணெய் நாடோறுஞ் -செல்லத்தான்

கண்டா னரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெலாம்

கொண்டானந் தொண்டையர் கோன்.

பொன்னு லகுதாம் புலியூர் தொழுவதற்

48

குன்னி யிழிகின்ற தொக்குமால் -தென்னர்

(குடிவி)டா மற்செகுத்த கூத்தன் பொன்னின்

கொடிபுறஞ் செய்த குழாம்.

ஆதிசெம்பொ னம்பலத்தி னம்மா னெழுந்தருளும்

49

வீதியும்பொன் மேய்ந்தனனாய் மேல்விளக்குஞ் - சோதிக்

கொடியுடைத்ாய்ப் பொன்னாற் குறுகவலா னொன்றும்

படியமைத்தான் றொண்டையர்கோன் பார்த்து

நாயகர் வீதி யெழுந்தருளும் நன்னாளால் தூய கருவெழு தூபத்தாற் -போயொளிர்சேர்

41-55,சிதம்பரக் கல்வெட்டுக்கள் ; S.I.I. Vol., IV, p. 34.

50