பக்கம்:நான்மணிகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 37

எள்ளற் பொருளது இகழ்தல் ஒருவனை உள்ள ற் பொருளது உறுதிச்சொல் - உள்ளறிந்து சேர்தற் பொருளது அறநெறி பன்னூலுந் தேர்தற் பொருள பொருள். (51)

யாறுள் ளடங்கும் குளமுள வீறுசால் மன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின் வேத முறுவன பாட்டுள வேளாண்மை வேள்வியோ டொப்ப வுள. (52)

எருதுடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான் ஒரு தொடையான் வெல்வது கோழி - உருவொடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப - - செறிவுடையான் சேனா பதி. (சேனை (க3)

யானை யுடையார் கதனுவப்பர் மன்னர் கடும்பரிமாக் காதலித் துர்வர் - கொடுங்குழை நல்லாரை நல்லவர் நானுவப்பர் அல்லாரை அல்லார் உவப்பது கேடு, - (44)

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை - மக்களின் ஒண்மைவாய்ச் சான்ற பொருளில்லை யீன்றாளோடு எண்ணக் கடவுளு மில். (45 )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/29&oldid=587255" இருந்து மீள்விக்கப்பட்டது