பக்கம்:பதினாறும் பெறுக.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2

2

இளங்கோ : (மகிழ்ந்து கைகொட்டி) பலே பலே! பாட்டு மிகப் பிரமாதம்!

நாட்டியம் அதைவிடப் பிரமாதம்!

கமலவேணி : (வியந்து)அடடே! வா தம்பி இளங்கோ இந்த குறல்நெறிப் பாடலும், ஆடலும் உண்மையாகவே உனக்குப் பிடிக்கிறதா? உபச்சாரத்திற்குப் புகழ்கிருயா?

இளங்; இதென்னம்மா! இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மனதிலொன்று

வாக்கிலொன்று வைப்பவன் நானல்லவே!

கமல: நீயொரு கல்லூரி மாணவன் தானே?

இளங்: ஆமாம் அதல்ை?

கமல: ட்விஸ்டு, பால்ரூம் டான்ஸ், ராக்அண்ட்ரோல் நாட்டியங்களே பசிப்ப

தல்லவிோ கல்லூரி மாணவனுக்கழகு?

இளங்: ஆமாம்! இல்லே, இல்லை, எனது நண்பர்கள்தான் அப்படி நான் இல்லை. எனக்குப் பண்புள்ள தமிழிசையும், பரதநாட்டியமும் மிகவும் பிடிக்கும்.

கமல நிரம்ப மகிழ்ச்சி புளிக்கும் பழக்கடையில் ஒரு இனிப்பான

மாம்பழமும் இருக்கிறது.

தாழம்பூ அம்மா, அம்மா.

கமல என்னடி தாழம்பூ?

தாழம்பூ இந்த மாம்பழம் முழுவதும் இனிப்பென்று நீங்கள் நம்பி

டாதீர்கள்! இந்த இனிப்புப் பழத்தின் மேல் பழமை

என்ற கசப்பான் தோல் மூடியிருக்கிறது. கலைகளிலே புதிய கருத்துக்களை இணைக்கக்கூடாது என்பவர் இவர்.

கமல! அப்படியா இளங்கோ? புதிய கருத்துக்களை வெறுக்கிருயா நீ.

இளங்: நல்ல புதிய கருத்துக்களை நான் வெறுக்கவில்லை என்ருலும் அவற்றை நுழைத்து கலைகளே மாசு படுத்துவது பிடிப்பு தில்லை. கலை கலைக்காகத்தானே வளரவேண்டும்.

கமல: நீ கருத்தில்லாத கலையை விரும்புகிருய். நல்லது ; இராமாயண

காவியம் எதறகாக உண்டாயிற்று?

இளங் : (யோசித்து நீதியை உணர்த்திட

கமல தியாகராஜர் இசைப்பாடல்களே எதற்காக இயற்றினர்.

இளங் பக்தியை வளர்த்திட, கமல முன்னேர்கள் அரிச்சந்திர நாடகத்தை என் எழுதினர்கள்?

இளங் சத்தியம் காத்திட

கமல: நீதியை உணர்த்தல், பக்தியை வளர்த்தல், சத்தியம் காத்தல் போன்ற கருத்துக்களைக் கலைகளில் புகுத்தியது குற்ற மல்லவா. கருத்தற்ற கலையல்லவோ வளரவேண்டும்?

இதுவரை அப்படி வளர்ந்திருக்கிறதா? வளர்க்க முடிந்தால் இனியும் வளர்க்க முடியுமா? யோசித்துப் பார் ಘೋ