பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84
பல்லவர் வரலாறு


அணிந்த மகேந்திரன்நின்றிருப்பதாக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் வலக்கை உட்கோவிலைச் சுட்டியபடி உள்ளது. இடக்கை முதல் இராணியின் வலக்கையைப் பற்றியபடிஉள்ளது; அவனுடைய இராணிமார் ஒருவர் உருவங்களும் நின்ற கோலத்தில் காணப் படுகின்றன.

அக் குகைக் கோவிலில் சிம்ம விஷ்ணுவின் உருவம் காணப் படலால், அஃது அவனால் கட்டப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சிம்மவிஷ்ணு சிறந்த வைணவர்பக்தன் ஆதலாலும், காஞ்சியையும் சோழநாட்டையும் கைப்பற்றிய பெருவீரன் ஆதலாலும் தன்னைப் பற்றிய நினைப்பும் பக்தியின் சிறப்பும் நிலைத்திருக்க இக் குகைக்கோவிலை அமைத்தான் எனக்கூறுவதில் தவறில்லை; மேலும், அவன் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவன்; ஆதலால் தமிழ் நாட்டிற்கே புதிய குகைக் கோவிலை மாதிரியாக அமைத்து மகிழ்ந்தான் என்பது நம்பத் தக்கதே. இதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் என்று கொள்ளுதலும் சாலப் பொருத்தமுடையதே. மேலும், மகேந்திரன் அமைத்த குகைக்கோவில் தூண்களைப் போல இக் குகைக்கோவில் தூண்கள் செம்மையுற்றன அல்ல.[1]

வாகாடகர் அசந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றைக் கண்டு அவருடன் கொள்வனைகொடுப்பனை வைத்திருந்த விஷ்ணு குண்டர் என்னும் மரபினர் கிருஷ்ணையாற்றங்கரையில் பல குகைக் கோவில்களை அமைத்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டிருத்தல் கூடியதே. அந்நினைவு கொண்டே அவர் மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருநத்தல் வேண்டும்.[2]


  1. Heras’s “Studies in Pallava History p.75.
  2. Prof Dubreil’s “The Pallavas’, P35.