பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92
பல்லவர் வரலாறு


ஆண்டு வந்தனர். பாண்டிய நாடடிற்கும் பல்லவர் நாட்டிற்கும் இடையே சோழர், களப்பிரர் என்போர் சிற்றரசர்களாக இருந்து சில ஊர்களை ஆண்டு வந்தனர். களப்பிரர் ஒருகால் பல்லவரையும் மற்றொருகால் பாண்டியரையும் தழுவிக் காலத்திற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து வந்தனர். சோழருள் ஒருபிரிவினர் பல்லவர் துணையால் வடக்கே சென்று கடப்பை கர்நூல் தோட்டங்களைச் சிற்றரசராக இருந்து ஆண்டு வந்தனர். அவர்கள் தம்மை ரேநாண்டுச் சோழர்கரிகாலன் மரபினர் என்று கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டனர்.[1]

ஆந்திர அரசர் தெலுங்கு நாட்டின் சில பகுதிகளை ஆண்டனர். குண்டுர்க் கோட்டத்தையும் அதற்கு வடக்கே உள்ள கடற்கரை வெளியையும் பீமவர்மன் மரபினர் ஆண்டு வந்தனர். இங்ஙனம் சிற்றரசர் பலர் மகேந்திரன் நாடடில் இருந்தனர்.

மகேந்திரன் அமைத்த கோவில்கள்

இம் மன்னன் பல்லாவரம், சீயமங்கலம், திருவல்லம், திருக்கழுக் குன்றம், மண்டபப்பட்டு, மாமண்டூர், தளவானுர், சிங்கவரம், மகேந்திரவாடி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் முதலிய இடங்களில் உள்ள மலைகளை வெட்டிக் குடைந்து கோவில்களை அமைத்தான். இவற்றுள்.(1) மாமண்டுர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் குடையப்பட்டடவை பெருமாள்கோயில்கள்ஆகும்; (2) சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப் பள்ளி என்னும் இடங்களில் குடையப்பட்டவை சிவன் கோயில்கள் ஆகும்; (3) மண்டபப் பட்டில் மும்மூர்த்தி கோவிலும், (4) சித்தன்னவாசலில் சமணர் கோயிலும் குடையப்பட்டன.

கோவில் அமைப்பு

மகேந்திரன் கோவில்களைக் கண்டவுடன் எளிதில் இவை மகேந்திரன் கட்டியவை எனக் கூறிவிடலாம். இக்கோவில்கள்

  1. K.A.N. Sastry’s Cholas, Vol.I p. 122.