பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
117
நரசிம்மவர்மன்


அப் பேரரசனுக்கு இடர்வராமற் காக்க மாணவன்மன், பிறகு பெருஞ் சேனையுடன் சென்று போரிற் கலந்துகொண்டு பல்லவன் வெற்றிக்குத் துணைசெய்தான். இச்செயலால் மட்டற்ற மகிழ்ச்சிகொண்ட நரசிம்மவர்மன் மானவன்மனுக்கு மாப்படை, மக்கட்படை, மரக்கலப்படை இவற்றை உதவி இலங்கைக்கு அனுப்பினான். படை உதவி பெற்ற மாணவன்மன், இலங்கையில் இறங்கி முதலில் நடந்தபோரில் வெற்றிபெற்றான்.ஆயினும் அடுத்த போரில் தோல்வியுற்றான். அவன் உடன்சென்ற சேனை அவனைக் கைவிட்டது. அதனால் மானவன்மன் மீட்டும் காஞ்சிக்குத் திரும்பினான்.

இலங்கைப் போர்-2

அவனது துயரைக்கண்டு மனம் பொறாத பல்லவப்பேரரசன், தன் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி மானவன்மனிடம் ஒப்புவித்துத் தானும் மாமல்லபுரம் என்ற துறைமுகத்திற்குச் சென்றான். பல்லவன்தானும் கப்பலில் ஏறுவதாகத்தன் படைவீரரை நம்புமாறு செய்தான்; அதனால் மகிழ்ந்த வீரர் இலங்கை நோக்கிச் சென்றனர். கடும்போர் செய்தனர். மானவன்மன் வெற்றி பெற்று இலங்கை அரியணை ஏறினான்.[1] இங்ஙனம் இலங்கை இளவலுக்குப் பல்லவப் பேரரசன் செய்ததுணிச்சலான உதவியைப் பாராட்டிப் பேசிய காசக்குடிப் பட்டயம், ‘நரசிம்மன் இலங்கையில் பெற்ற வெற்றி இராமன் இலங்கையில் பெற்ற வெற்றி போன்றது’ என்பதைக் குறிப்பிட்டுள்ளது.[2]

சீன வழிப்போக்கன்

ஹர்ஷனது பேரரசையும் இரண்டாம் புலிகேசியினதுசாளுக்கியப் பேரரசையும் பார்வையிட்டுப் பெளத்த இடங்களைக் கண்டு போகவந்த சீன வழிப்போக்கனான இயூன்சங் என்பவன் காஞ்சிக்கு வந்தான். அவன் ஏறக்குறையை கி.பி. 642இல் வந்தான். அவன்


  1. Mahavamsa (Toumour’s translation) Ch.7
  2. S.I.I. Vol. ii p.343.