பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
191
சில புராணக்கதைகள்


உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டு ஒன்று. இவனது 18ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது. (6) கோவிலடிக் கருகில் திருச்சன்னம்பூண்டியில் உள்ள சடையர் கோவில்கல்வெட்டு இவனது 18ஆம் ஆட்சி ஆண்டைக் குறிக்கிறது. (7)திருப்பராய்த் துறையில் உள்ள ஆதிமூலேச்சுரர் கோவிற் சுவரில் உள்ள கல்வெட்டு இவனது 22ஆம் ஆட்சி ஆண்டைக்குறிக்கிறது. (3) குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் கல்வெட்டு ஒன்று இவனது 23ஆம் ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது. இதற்குப் பிறகு வேறு கல்வெட்டுக் கிடைக்கவில்லை. ஆதலின். இப்பேரரசன்.ஏறத்தாழ 25ஆண்டுகளேஅரசனாக இருந்தான் போலும் என்று அறிஞர்கருதுகின்றனர்.

தெள்ளாறு எறிந்த காலம்

இவனது 10ஆம் ஆட்சி ஆண்டு முதல் வெளியிடப்பட்ட எல்லாக் கல்வெட்டுகளிலும் இவன் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்” என்றே குறிக்கப்படுகிறான். ஆனால், இவனது 6ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த வேலூர் பாளையப் பட்டயத்தில் இது காணவில்லை. எனவே, இவன் தனது 6ஆம் ஆண்டிற்குப் பின்னும் 10ஆம் ஆண்டிற்கு முன்னும் தெள்ளாற்றுப் போரில் வாகை சூடி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

நந்திக் கலம்பகம்

இஃது இந்த அரசன் மீது பாடப்பட்டது. இதில் பல பாக்கள் இவனது தெள்ளாற்றுப் போரையே குறிக்கின்றன. நாம் இந் நூலால் அறியத்தக்கவை பின் வருவன. அவை - “இவன் சந்திர மரபினன்; சேர சோழ பாண்டியரை வெறியலூர், பழையாறு. வெள்ளாறு, தெள்ளாறு இவற்றில் நடந்த போர்களில் முறியடித்தவன்; மூவேந்தரிடமும் வடபுலத்தரசரிடமும் திறை பெற்றவன்.” என்பன. இவன் பல இடங்களில் ‘அவனி நாரணன், அவனி நாராயணன்’ என்று குறிக்கப்பட்டடுள்ளான். இவன் காலத்தில் காவேரிப்பாக்கம் அவனிநாராயணசதுர்வேதிமங்கலம் எனப்பெயர் பெற்று இருந்தது. எனவே மூன்றாம் நந்திவர்மன் அவனி நாராயணன் எனப்பட்டான்.