பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
209
சமணசமயப் புகழ்பாக்கள்


பிருதிவீ மாணிக்கம்

இது நிருபதுங்கன் மனைவிபெயர். இப்பெயர்கொண்டஅளவை ஒன்று நிருபதுங்கன் ஆட்சியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறியலாம். இவள் ‘பிருதிவி கங்க அரையர்’ என்றும் முதலாம் பிருதிவீபதி என்றும் கூறப்பட்ட கங்க அரசன் மகள் என்னலாம். இவள் பெற்ற மைந்தனே அபராசிதவர்மன். அதனாற்றான் திருப்புறம்பியப் போரில், பாட்டானான பிருதி வீபதி பெயரனான அபராசிதனுக்கு உதவியாகச் சென்றான் எனக் கொள்ளலாம். வேறொரு கல்வெட்டில், ‘தேவியார் வீரமகாதேவியார்’ என்பது காணப்படுகிறது. இவள் நிருபதுங்கனுக்கு மற்றொரு மனைவி போலும் ‘பிருதிவீ மகாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்றொரு சிற்றுாரின் பெயரும் கல்வெட்டில் காண்படுகிறது. இது நிருபதுங்கன், தன் மனைவி பெயரை இட்டுக் குறிப்பிட்ட சிற்றுார் ஆகும். இவள் ‘தாயார் பானுமாலி’ என்பவள். இந்தப் பிருதிவீ மாணிக்கமே உக்கலில் உள்ள பெருமாள் கோவிலைக் கட்டியவள் என்னலாம்.[1]

மாதேவி அடிகள்

இவள் அபராசிதன் மனைவி, இவன் தமிழ் நாட்டுப் பெண்மணி ஆதல் வேண்டும். இவள் திருவொற்றியூரில் உள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 31 கழஞ்சு பொன் கொடுத்தவள்.[2]

நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்

புதுக்கோட்டைச் சீமையில் உள்ள பழியிலி ஈச்சுரம் என்ற கோவில், பல்லவ அரசனாகிய நிருபதுங்க வர்மன் காலத்தில் குடையப்பட்டது என்பது அக்கோவில் கல்வெட்டினால் அறியப்படுகிறது.


  1. Dr. Minakshi’s Ad. and S.I. life under the Pallavas p.4. 161
  2. 162 of 1912.