பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
221
சமணசமயப் புகழ்பாக்கள்


இரட்டரை ஒடச் செய்தன. இக் குறிப்புகளை நன்கு நோக்குழிப் பல்லவர் பண்பட்ட போர்த்திறன் பெற்ற படைகளை வைத்திருந்தனர் என்பது வெள்ளிடை மலையாகும்.

கடற்படை

பல்லவர் கடற்படையும் இளைத்ததன்று. நரசிம்மவர்மன் தன் நண்பனான மானவன்மனுக்கு உதவிபுரியத் தன் கடற்படையை ஈழத்திற்கு அனுப்பினான்-அப்படைவெற்றிகொண்டதுஎன்பவற்றை உணர்கையில் பல்லவர் கடற்படை வலிமை தெற்றெனத் தெரிகின்றதன்றோ? நிருபதுங்கவர்மன் காலத்தில் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவன் கடற்படை பெற்று ஈழத்தின் மீது படையெடுத்த செய்தியைக் காண்க.[1] இராசசிம்மன் இலக்கத் தீவுகளை வென்றதாகக் குறிப்புக் காணப்படுகிறது.[2]

இந்த இராசசிம்மன் காலத்தில் பல்லவ நாடு சீனத்துடன் சிறந்த வாணிபம் செய்து வந்தது. அக் காலத்தில் நாகப்பட்டினம் பல்லவர் துறைமுகப் பட்டினங்களில் ஒன்று. அங்கு இவன் சீனவணிகர் பொருட்டுப் புத்தர் கோவில் ஒன்றைக் கட்டுவித்துச் சீனப்பேரரசன் நன்மதிப்பைப் பெற்றான்.[3] அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினமும் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்த தென்னலாம்.[4] மூன்றாம் நந்திவர்மன் காலத்திலும் பல்லவர் கப்பல்கள் சையாம் முதலிய கடல்கடந்த நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தன என்பது ‘தகோபா’ கல்வெட்டு முதலியவற்றால் அறியலாம்.

நாடும் ஊரும்

நாடு என்பது சிற்றுரைவிடப் பெரியது. கோட்டத்தை விடச் சிறியது. நாட்டார் என்பவர் அப்பகுதிக்கு உரிய சான்றோர். ஊரார் என்பவர் சிற்றுரைச் சேர்ந்த அறிஞர். ‘ஆள்வார்’ என்பவர் ஊரை


  1. EP, Indica, Vol. XVIII, P.13,
  2. Ibid p.152. 370.
  3. Dr.C.Minakshi’s Administration and Social Life under the Pallavas” pp.68-69
  4. சம்பந்தர் தேவாரம் பக்.14-15. (கழகப் பதிப்புப்)