பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
275
மூன்று ஐயங்கள்


இராசசிம்மனும் இசையும்

இராசசிம்மனும் இசையில் பெரும் புலமை பெற்றவன் ஆவன். அவனுடைய பல விருதுப் பெயர்களுள் ‘வாத்ய வித்யாதரன்’ (இசைக் கருவியில் வித்யாதரன்), ஆதோத்ய[1] தும்புரு, (தும்புருவைப்போல ஆதோத்ய வீணை வாசிப்பில் வல்லவன்). வீணா நாரதன் (வீணையில் நாரதன் போன்றவன்) என்பன அவனது, இசைப் புலமையை நன்கு விளக்குகின்றன்.

நாயன்மார் இசை

பண்களையும் தாள வகைகளையும் உண்டாக்கி அமைத்தவன். ஒருவன், பலவகை வாத்தியங்களில் சிறப்பாக வித்யாதரரையும் நாதனையும் தும்புருவையும் நிகர்த்தவன் ஒருவன் எனின் அம்ம்ம்ம! இப்பல்லவப் பெருவேந்தர் காலம் இசைக்காலமே ஆகும் என்பதில் ஐயமுண்டோ? இதனாற்றான் போலும், மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசர் பலவகைப் பண்களைக் கொண்ட, அரியதேனினும் இனிய தேவாரப் பதிகங்களைத் தலங்கள் தோறும் பாடிக்களித்தார்! பரமனுக்கும் பல்லவ நாட்டு மக்கட்கும் செவி விருந்தளித்தார்! அவர் காலத்துச் சம்பந்தரும் இசைப் புலவராகி மிளிர்ந்தார்! சம்பந்தர் இசைப் பாடலிற் பெரிதும் வல்லவர். அவர் பாடிய பாக்களை யாழில் அமைத்துத் தலங்கள் தோறும் பாடிவந்தவர் திருநீலகண்ட ‘யாழ்ப்பர்னர்’ ஆவர். அவரும் வாசிக்க இயலா வகையில் சம்பந்தர் ஒரு பாட்டைப்பாடித் திகைக்க வைத்தார்.[2] எனின், அக்கால இசை மேம்பாட்டை என்னென்பது!

அப்பர், ‘ஈசன் எந்தை இணையடி நிழல்-மாசில்லாத விணை ஒலி போன்றது என்று கூறுவதிலிருந்து அவரது இசைப் புலமையும்


  1. மகேந்திரன் இசைக் கலை உணர்வை முழுதும் உணர வேண்டுமாயின் டாக்டர் மீனாட்சி அம்மையாரின் அரிய ஆராய்ச்சி நூலைப் படித்துணர்க. ஆதோத்யம் என்பது, முரசம், குழல் தாளம் ஆகிய நான்கையும் குறிக்கும்.
  2. சம்பந்தர் புராணம், செ. 446 - 454