பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

பல்லவர் வரலாறு



இசை இன்பத்தில் ஆழ்ந்து கிடந்த அவரது நுட்ப உணர்வினையும் நாம் நன்குணரலாம். சுந்தரரும் இசையிற் சிறந்தவர். இம்மூவர் தேன் பாடல்களும் திெவிட்டாத பேரின்பம் பயப்பனவாகும்; கேட்போர் செவி வழியாப் புகுந்து உள்ளத்தைப் பேரின்ப மயம் ஆக்கிக் கருவி கரண்ங்களை ஒயச்செய்து இசை உலகமாகிய பேரின்பப் பெருவாழ்வில் உய்ப்பனவாகும். சைவசமயம் அக்காலத்தில் மிகுதியாகப் பரவியதற்குற்ற சிறந்த காரணங்கள் சிலவற்றுள் இசைப்பாட்டு ஒன்றாகும். இந்த இசையை வளர்த்தவருள் முதல்வன் மகேந்திரவர்மன். அவன் காலத்தில் பல்லவப் பெருநாட்டில் இருந்த பெருங்கோவில்களில் எல்லாம் இசை வெள்ளம் கரை புரண்டு ஒடியது என்பதை அப்பர்-சம்பந்தர் பாக்களால் பாங்குற உணரலாம். பெண் மக்கள் இசையில் வல்லவராக இருந்தனர். ஆடவரும் அங்ஙனமே சிறந்திருந்தனர். ஆடவரும் பெண்டிரும்கோவில்களில் கலந்து பாடினர் என்னும் குறிப்புக்கள் தேவாரத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம்.

“பண்ணியல் பாடல் அறாத ஆவூர்”
“பக்திமைப்பாடல் அறாத ஆவூர்”
“பாஇயல் பாடல்அறாத ஆவூர்” (சம்பந்தர் பதிகம் 8)
“.......மாதர் விழாச் சொற்கவி பாட நிதான நல்கப்
பற்றிய கையினர் வாழும் ஆவூர்” (சம்.பதி.செ.6)
“கோல விழாவின் அரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரொடும்
பாலென வேமொழிந் தேத்தும் ஆவூர்” (சம். பதி. செ. 9)
“தையலார்பட்டோவாச் சாய்க்காடு”
“மாதர் மைந்தர் இசைபாடும் பூம்புகார்”

‘சித்தம் நமசிவாய’ என்று சிவனார்க்கு வணக்கம் செய்து இசை இலக்கணம் கல்வெட்டிற் பொறித்த சிறந்த சிவபக்தனான, மகேந்திரவர்மன், இசைக்கலையிலும் நடனக்கலையிலும் பேரின்பம்