பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

பல்லவர் வரலாறு



(4) சாலங்காயன அரசர்வேங்கி நகரத்தில் இருந்த சித்திரதசாமி கோவிலுக்குப் பல தானங்கள் செய்துள்ளனர் என்று அவர்தம் பட்டயங்கள் (கி.பி. 250-450) பகர்கின்றன.

(5) ஸ்தானகுண்டுரம் என்னும் ஊரில் சாதவாகனர் காலத்தில் சிவன் கோவில் ஒன்று இருந்ததாகக் கதம்பரது தாளகுண்டாக் கல்வெட்டுக் கூறுகிறது.[1]

(6) முண்டராட்டிரத்துக் கந்துகூரத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்கு இளவரசன் விஷ்ணு கோபபல்லவன் நிலம் விட்டதாக உருவப்பள்ளிப்பட்டயம் (கி.பி. 450) கூறுகின்றது.

சங்ககாலத்துக் கோவில்கள்

பண்டைத் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே வீரர் வணக்கத்துக்குரிய கோவில்கள் (நடுகல் கொண்ட கோவில்கள்) இருந்திருத்தல் வேண்டும் என்பதும், முருகன் திருமால்-காடுகிழான் (துர்க்கை) முதலிய தெய்வங்க்ட்குக் கோவில்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரலாம். தொகை நூல்களிற் சிவபெருமான், முருகன், திருமால். பலராமன் இவர்கள் சிறப்புடைக் கடவுளராகக் கூறலை நோக்க, இவர்கட்குக் கோவில்கள் இருந்தமை அறியலாம். ஆலமர் செல்வனுக்கு (சிவபிரான்) நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய்வேன் தந்தனன் என்று புறப்பாட்டுக் கூறுகின்றது. இதனால் அக்காலத்தில் கோவிலும் லிங்கமும் இருந்தன என்பது பெறப்படுகிறதன்றோ?

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தும் மணிமேகலையிலும் காணப்படும் கோவில்கள் பல ஆகும்; மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில்,

“காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
  1. Dr.N.Venkataramanayya’s “Origin of S.I.Temple’. p. 53.