பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48
பல்லவர் வரலாறு


பிறர் கூற்று

(1) மயிதவோலு, ஹிதஹதவல்லி - பட்டயங்கள் காஞ்சியிலிருந்து விடப்பட்டவை. முதல் பட்டயம் இளவரசனான சிவஸ்கந்தவர்மன் விடுத்தது; இரண்டாம் பட்டயம் சிவஸ்கந்தவர்மன் ‘தர்ம மகா ராசாதிராசன்’ ஆன பிறகு விடுத்தது. இந்த மயிதவோலுப் பட்டயமே பல்லவர் பட்டயங்களில் பழைமை வாய்ந்தது; சயவர்மனது (பிருகத்பலாயன அரசன்) கொண்ட முடிப்ப பட்டயங்கள், கெளதமீ புத்திர சதகர்ணி விடுத்த கார்லே-கல்வெட்டு, வசிஷ்டீபுத்திர புலுமாயி விடுத்த நாசிக் கல்வெட்டு ஆகிய இவற்றை ஏறக்குறைய ஒத்துள்ளது. எனவே, சிவஸ்கந்தவர்மன் மேற்சொன்ன அரசர் காலத்திற்கு மிகுந்த பிற்காலத்தில் இருந்திருத்தல் முடியாது. (2) மேலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இடையில் காஞ்சியை விஷ்ணு கோபன் ஆண்டதாகச் சமுத்திர குப்தன் கல்வெட்டுக் கூறுகிறது. குப்தனை எதிர்க்கத்தக்க அளவில் வன்மை பெற்ற பல்லவர், அதற்கு முன்னர்ச் சில தலைமுறையேனும் காஞ்சியில் ஆண்டனர் என்று கொள்ளலே ஏற்புடையதாகும். (3) காஞ்சியைப் ‘பல்லவேந்திரபுரி’ என்று கதம்ப-காகுத்தவர்மன் பட்டயம் கூறலாலும், அது மயூரசன்மனது வாக்கு எனக் கொள்ளின், மயூரசன்மன் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று சந்திரவல்லிக் கல்வெட்டுக் கூறலால், பல்லவர் காஞ்சியில் ஆளத்தொடங்கிய காலம் ஏறத்தாழக் கி.பி.250 எனக்கோடல் தவறாகாது. (4) கி.பி. 200 அல்லது 250 உடன் முடிவுற்ற சங்ககால நூல்களிலும் பல்லவர் குறிக்கப்பட்டாமையும், ஒரு சான்றாகும். இன்ன பிற காரணங்களால், பல்லவரது ஆட்சித்தொடக்கம் ஏறக்குறைய கி.பி. 250 எனக்கோடலே பொருத்தமுடையது....... சிவஸ்கந்தவர்மனின் தந்தையே (பெயர் தெரியவில்லை) காஞ்சியைப் பிடித்தாண்ட முதல் அரசனாகக் கூறலாம்.[1]

முடிபு

அறிஞர் கருத்துகள் பலவாக இருத்தலை நோக்க, கீழ் வருமாறு முடிபுகொள்ளல் பொருந்துவதாகும். (1) சிவஸ் கந்தவர்மனே தன்


  1. Dr.c. Minakshi’s Administration and Social Life under the pallavas pp.12 & 10.