பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 பாரதிதாசன்

படுத்துகின்றன.

'ஏல வல்லியும் இருங்கறி வல்லியும். கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும் தெங்கின் பழனும் தேமாங்கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமுங் கரும்பும் பூமலிகொடியும் கொழுந்தாட்கமுகின் செழுங்குலைத் தாறும் பெருங்குலை வாழையின் இருங்கனித்தாறும்"

(சிலம்பு-காட்சி-37)

மேலும் பாண்டிய நாட்டுத் தாலாட்டில்

வாழை இலைபரப்பி வந்தாரைக் கையுமர்த்தி வருந்தி விருந்துவைக்கும் மகராசர் பெயரனோ? தென்னை இலைபரப்பிச்சென்றாரைக் கையமர்தித் தேடிவிருந்தழைக்கும் திசைக்கருணர் பெயரனோ?

என்ற தாய்மைதரும் தாலாட்டு வரிகள்,

“செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்" குறட் பண்பாட்டை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. சோதிச் சுடரொளியே' என்று தன் குழந்தையைப் பாராட்டுகிறாள்.தாய். "சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே" என்று இறைவனைப் பாராட்டியழைக்கிறார் மாணிக்கவாசகர். நாஞ்சிற்பகுதித்தாலாட்டில் 'எலும்புருகப் பெற்றெடுத்த இலஞ்சியமே எனத் தாய் தன் குழந்தையைப் பாராட்டுவது போல "உமையாள் பயந்த இலஞ்சியமே” என்று தமது திருப்புகழில் முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி நாதர்.