பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84

பாரதிதாசன்

ஒர்குடைக் கீழ்ஆண்ட உவகை உனக்குண்டு! சேரனார் சோழனார் சேர்த்தபுக்ழ் உன்புகழே:

ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார் காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர்

உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்? பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு:

கற்சுவரை மோதுகின்ற கட்டித் தயிரா, நற் பொற்குடத்தில் வெண்ணெய் தரும் புத்துருக்கு நெய்யா, நல்

ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப் போல்நிறைத்த பாலைப் புளியங்கொட்டை தான்் மிதக்கும்

இன்பநறும் பாலா, என்ன இல்லை? கண்ணுறங்காய். அன்பில் விளைந்த என் ஆருயிரே கண்ணுறங்கு!