பக்கம்:பாரதித் தமிழ்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியார்.வாழ்க்கை வரலாறு 41

இதற்கும் அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படவே இதையும் புதுச்சேரியிலிருந்து நடத்த முடிவு செய் தினர். விஜயாவும் கர்ம்யோகியும் 1909 செப் டெம்பர் 7-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி முதல் வெளிவந்தன. பாரிதியார்ை ஆசிரியராகக்கொண்டு சூர்யோதயம் என்ற பத்திரிகையும் வெளிவரலா யிற்று. இ ைவ யெ ல் லாம் 1910-ஆம்ஆண்டிற் குள்ளேயே மறைந்து போயின.

பத்திரிகைத் தொண்டு முடிவடைந்தது. பாரதி யாரின் வறுமையும் துன்பமும் மட்டும் வளர்ந்து கொண்டேதான் இருந்தன. தமது ப்ொழுதையும், மனத்தையும் கவரக்கூடிய பத்திரிகைகளும் நின்று விடவே அவர் வாழ்க்கை வெறிச்சென்று போயிருக்க வேண்டும்.

பாரதியார் புதுவைக்குத் த னி யா க வே சென்றார். மனைவி திருமதி செல்லம்மா பாரதி சென்னையிலே யிருந்தார். பிறகு அவருடைய தமை யனர் வந்து கடயத்துக்கு அவரை அழைத்துச் சென்றார்.

பின்னல் திருமதி செல்லம்மா பாரதியும் புதுச் சேரி வந்து சேர்ந்தார். குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகொண்டது.

பாரதியார் எத்தனையோ துன்பங்களை அநுபவித் தார். அவருடைய நிலையினைச் சித்தக்கடல் என்ற சிறு பகுதியினில் அவர் எழுதியுள்ள கீழ்க்கண்ட வாச கத்திலிருந்து ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

“மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்று கிறாய்! பராசக்தி, எனது கருவி கரணங்களிலே நீ பரி பூர்ணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங்ஙனமே காக்கவேண்டும்.