உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

2. வினைமுற்று

எ-டு : கந்தன் வந்தான். - தெரிநிலை இரெட்டியார் நல்லவர். - குறிப்பு

வா. ஏவல்

இறைவன் அருள்க! - வியங்கோள்

3. இடைச்சொல்

எ-டு : இது மற்றையது.

4. உரிச்சொல்

ஆண்மையும் முயற்சியும் உள்ளவனுக்கு அரசும் தஞ்சம். தஞ்சம் = எளிமை. 'மற்றையது' 'தஞ்சம்' என்னும் இரண்டும் உண்மையிற் பெயர்ச்சொற்களே.

எ-டு : இக் காய் வம்பு.

வறுமையும் ஒரு சிறுமை.

வம்பு

=

பருவமல்லாக் காலத்தில்

தோன்றுவது.

சிறுமை = நோய்.

5. ஏதேனுமொருசொல்

எ-டு : அவர் சொன்னது 'இயங்கி' (Motor).

அவர் சொன்ன சொல் 'இயங்கி'.

6. தொடர்மொழி

எ-டு : வந்தான் என்பது செயப்படுபொருள் குன்றியவினை. சோழவரசை மீண்டும் நாட்டியவன் முதலாம் இராசராசன்.

7. கிளவியம்

எ-டு: உயிர்நூலார் கருத்து, போரும் ஒரு தேவ ஏற்பாடு என்பது.

பயனிலைப் பொருள்வகைகள்

பயனிலைப் பொருள்கள் பின்வருமாறு எண்வகைப்படும்:

1. சொன்மை குறித்தல்

எ-டு : கம்பர் மகன் பெயர் அம்பிகாபதி.

சேக்கிழார் பொன்னம்பலத்திற் கேட்ட சொல் 'உலகெலாம்'.