உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

95. தமிழன் தாழ்வுணர்ச்சி

'காக்காய்க் கண்ணுக்கு' என்ற மெட்டு

1

சூத்திரன் என்று சொல்லாதே சொல்பவ ரோடே ஒல்லாதே மாத்திறந் தன்னைக் கொல்லாதே மடமைத் தாழ்வு பொல்லாதே.

2

நாற்பால் என்பது நாற்றொழிலே நடத்துந் தொழிலே நங்குலமாம்

ஏற்கா வகையிற் பிறப்போடே

இணைத்தார் ஆரியர் இழுக்காக.

3

யானை கட்ட வன்றொடரி

தானே எடுத்துத் தருதல்போல்

மானங் கெட்ட தமிழன்தான்

தானே தன்னைத் தாழ்த்திக்கொண்டான்.

பண்

சிந்து பைரவி

96. தமிழன் குலம்

ப.

நானொரு தமிழன் நான்வந்த வழியே தேனினு மினிய செந்தமிழ் மொழியே.

து. ப.

நானிலம் முழுதும் நல்லக விழியே

நண்ணமுன் எழுந்தது நறுந்தமிழ் ஒளியே

85

தாளம் - முன்னை

(நானொரு)