உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

5

வண்ணத் திற்கே அருணகிரி

வசைபா டற்கே காளமேகம்

எண்ணிக் கொடுத்த அடிமுடிப்பில் இலகும் முனிவர் சிவஞானம்.

6

கடும்பா விற்குக் காளமேகம்

கருதும் இன்பா வெண்காடர்

அரும்பா மாம்பழப் பாவரிமா

அகலப் பாவும் மிகுகம்பன்.

  • மண்டிலம் = விருத்தம்

31. தமிழ்நாடு

'பாருக் குள்ளே நல்ல நாடு' என்ற மெட்டு

ப.

நானி லத்தே நல்ல நாடு

என்றும்

நம்தமிழ் நாடு

அ.1

நானிலத் தும்மிகு நன்னிலத் தில்விளை

நால்வகைச் செல்வமும் சால்வதுடன்

வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலைபின்

விளைநில மாவதிந் நாடு

2

பொன்னொடு வெள்ளியும் போற்றும்பல் விரையும்

போர்வை பல்லணியுடை வேர்மருந்தும்

மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற

மேலுலகும் விரும்பும் நாடு

(நானிலத்)

(நானிலத்)

25