உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௳ 

முதற்
குலோத்துங்க சோழன்

முதல் அதிகாரம்
சோழரும் சளுக்கியரும்


நம் தமிழகம்[1] சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று.[2] இவற்றுள், சோழமண்டலம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம்[3] எனவும் வழங்கப்பெறும்.


  1. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்’ –
          சிலப்பதிகாரம் - அரங்கேற்றுகாதை 37.

  2. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
    நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
    யாப்பின் வழிய தென்மனார் புலவர்’
        தொல்–பொருள்–செய்யுளியல்–சூத்-79.

  3. தண்பணை தழீஇய தளரா விருக்கைக்
    குணபுலங் காவலர் மருமான்’–
           சிறுபாணாற்றுப்படை–78, 79.