பக்கம்:வாய்மொழி இலக்கியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வரை ஆராயும்போது எங்கோ ஒரு சில இடைவெளிகளைத் தவிர்த்து, எல்லாக் காலங்களிலும் இவ்வாய்மொழி இலக் கியம் வளம் பெற்றே வாழ்ந்து வந்துள்ளது என அறிகின் ருேம். சங்க காலத்தில் இதைக் காப்பாற்றிய பெருமை பாணரையும் கூத்தரையுமே சாரும். அப்பாணரையும் கூத்தரையும் முன்னிறுத்திக் கவிபாடிய புலவர்களும் போற்றுதலுக்குரியவராவர். காலம் வளர வளர அறிஞர் கள் இவற்றைத் தம் காவியத்தோடு இணைத்து, தம் தம் நூல்களுக்கு ஏற்றத்தைத் தேடிக்கொள்ள நினைத்தனர். கடவுளைப் பாடியவர்களும் இவ்வாய்மொழி இலக்கியத்தை மறந்துவிட்டார் எனக் கூறமுடியாது என்பதனையும் அறிகின்ருேம். இளங்கோ போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விலக்கானவரல்லர். இந்த அடிப்படையில் அண் மையில் வாழ்ந்த ஒரு சிலர் இவற்றின் சிறப்பையே அறிந்து சிற்றிலக்கியங்களாகப் பாடியும் அவற்றை வாழ வைத்தனர் என்பதும் கண்கூடு. இவ்வாறு ஆராயும் நிலை யிலேயே வாய்மொழி இலக்கியம், எழுத்திலக்கியம் தோன் றிய அந்த நாளிலிருந்து இன்று வரை எப்படி எப்படித் தமிழில் உருப்பெற்று உயர்ந்து வந்துள்ளது என்பதைக் காண நேர்ந்தது. இது பற்றிய பல ஆங்கிலப் புலவர் தம் கருத்துக்களையும் படித்தறிந்தேன். அவ்வாறு கண்டறிந்த வற்றையே இந்நூலில் ஒன்றன்பின் ஒன்ருக வரிசைப் படுத்தி எழுதியுள்ளேன். கடும்பணிகளுக்கிடையில் அப் பணியாளரை மறக்கவைக்கும் பாடல்களையும் குறித்துள் ளேன். கடைசியாக உள்ள இரண்டொரு பகுதிகளில் இக்காலத்தில் வழங்கும் சில கிராமியப் பாடல்களே எடுத் துக் காட்டியுள்ளேன். இவற்றுள் ஒரு சில முன்னரே அறிஞர்களால் தொகுக்கப் பெற்ற நூல்களிலிருந்து எடுக்கப்பெற்றவைகளே. சிலர் மெய் வருந்தி, பல தொல்லை களுக்குட்பட்டுக் காடு மேடுகளையெல்லாம் கடந்து