பக்கம்:வார்த்தை வாசல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழைபால் இரக்க முள்ள

இக்கவி, நமது நாட்டில் வாழவே வழியில் லாமல் . வாடுவோர் தம்மைப் பற்றி . ஆழமாய்ப் பாடி யுள்ளார் !

அரசியல் நடத்து கின்ற - தாழங்காய்த் தலைவர் தம்மைச்

சரியாகச் சாடி யுள்ளார்.

அன்றைய திரைப்ப டத்தில்

அறிவியல் வளர்ச்சி யில்லை” என்று நம் பாவின் வேந்தர்

எழுதினர். அவ்வா, றிங்கே, இன்றைய திரைப்ப டத்தில்

இடம்பெறும் ஆபா சத்தைக் கண்டித்துப் பாடி யுள்ள -

கவிஞரை வரவேற் கின்றேன்.

கதைபொதி பாடல் செய்த

கம்பரும், சேக்கி ழாரும். முதியவர். இவரோ, செய்யுள்

முத்திரை உலகத் துக்குப் புதியவர். இந்நூற் பாக்கள்.

புதியவார்ப் படங்கள் ! ஒடும் நதியினல் நன்மை யுண்டு.

நமக்கிந்நூல் நன்மை செய்யும்.

- கவிஞர் சேயாறு காருண்யன் அவர்கள் எழுதிய புன்னகை” என்னும் கவிதை அாலுக்கு 1979-இல் வழங்கிய அணிந்துரை. -

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/42&oldid=645755" இலிருந்து மீள்விக்கப்பட்டது