பக்கம்:வெள்ளை யானை.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மீண்டும் அந்தக் காந்த இசை!


சபர்மதி வீணையை
அந்த
அகிம்சை விரல்கள்
சுருதி குலையாமல்
மீட்டிய போது
இராக தேவதை
அருவியாக இறங்கி வந்தாள்.

ததீசி முனிவரைப்போல்
தண்டு வடத்தை
வெட்டியெடுத்து,
அதன்-
மூலநரம்புகளை உருவித்
தியாகத் தீயில்
வாட்டிப் பதமாக்கி -

இதயத்தில் அடித்த ஆணிகளில்
இறுக்கிக் கட்டி
இந்தியரின்
சோகராகத்தை
அவன் மீட்டினான்.