பக்கம்:வெள்ளை யானை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


73 O வெள்ளை யானை பாதுகை: (மெதுவாகச் சிரித்துவிட்டு) ஓ! அதைச் சொல்கிறாயா? இராமன் காட்டுக்குப் போக, தசரதன் இறக்க, பரதன் அரசைத் துறக்க, அப்போது எதிர்பாராமல் வீசிய புதிய அலை என்னைஅரியாசனத்தில் அமர்த்திவிட்டது. அரியாசனத்துக்கும் அலைக்கும் எப்போதும் தொடர்புண்டு. சிலம்பு: இந்த நாளில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீ எப்படிப் பன்னிரண்டு ஆண்டுகள் அரசோச்சினாய்? பாதுகை: அன்று - ஊழலுமில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/63&oldid=916326" இருந்து மீள்விக்கப்பட்டது