பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய வரலாறு

9


உசேன் என்பவனை நியமித்தான். இதை அறிந்த கும்பினி அரசாங்கம் அலி உசேனிடம் ஈய உரைகள் பேசின. கர்நாடகம் முழுவதையும் ஆட்சி செலுத்தும் அதிகாரத்தைத் தங்களிடம் ஒப்படைத்தால் அன்றி அவன் அரசுரிமை ஏற்பதைத் தங்களால் அங்கீகரிக்க முடியாது என்று வெள்ளை அரசாங்கம் மிரட்டியது. கும்பினியின் நயஉரைகட்கும் பயமொழிகட்கும் இணங்க மறுத்தான் அலி உசேன். உடனே கும்பினி அரசாங்கம் வேறொரு ஆர்க்காட்டுப் பொம்மையின்மீது கவனம் செலுத்தியது. அது சமயம் காலஞ்சென்ற ஆர்க்காட்டு நவாபின் உறவினான அஜீம்-உல்-உமாரா ‘அரசுரிமை எனக்கே’ என்று ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினான். திசை மறைவில் கும்பினி அரசாங்கத்திடம் கர்நாடகத்தின் அதிகாரம் முழுவதையும் ஒப்படைத்து விடுவதாக வாக்குறுதி செய்தான். அமர அரியணை கிடைத்தால் போதும், நாட்டின் ஆட்சி உங்களுக்கே’ என்று பேசினான் தன்மானமற்ற அந்த அஜீம்-உல்-உமாரா. 1801-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி இந்த மனித்ப் பதருக்கும் கும்பினி அரசாங்கத்திற்குமிடையே ஒப்பந்தமொன்று எழுந்தது. ஆம். அறிஞர் கால்டுவெல் கூறுவதுபோல வாள்முனையால், வாய்வாதங்களால் சாதிக்க முடியாத காரியத்தை வாளினும் வல்லமை பொருந்திய தங்கள் பேனா முனையால் சாதித்துக் கொண்டனர்.[1]


  1. 2. At length after the discovery on the capture of Seringapatam, that a treasonable correspondence had been carried on by the