பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய விழிப்பு

17


எரிந்தது; கண்கள் சிவந்தன; நெஞ்சம் குமுறியது. ‘சரி சரி தமிழகத்தின் தெற்கெல்லையில் மாண்டு மடிந்த மாவீரர்கள் மீண்டும் இங்கே நம்மைப் பலிகொள்ள வந்துவிட்டார்கள் போலும்’ என்று கருதிப் பதறினான்.

காக்பர்னின் அழைப்பை ஏற்க மறுத்த வட ஆர்க்காடு மாவட்டப் பாளையக்காரர்கள் போருக்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் மின்னல் வேகத்தில் செய்து முடித்தனர். அவர்கள் ஆயுதபலம் ஆங்கிலேயர்களின் படைவலியை நோக்கக் குறைவுதான். ஆனால் தென் பாண்டிச் சீமையைப் போலவே வட ஆர்க்காடு மாவட்டத்திலும் அம்பு புகமுடியாத அடர்ந்த காடுகளும் எளிதில் எவராலும் ஏறி உச்சியைக் காணமுடியாத உயர்ந்த மலைகளும் பல பல உண்டு. இயற்கையாக அமைந்த இவ் அரண்களே எல்லாம் பயன்படுத்திக்கொண்டு வட ஆர்க்காடு மாவட்டத்துப் பாளையக்காரர்கள் சுதந்தரப் போரில் குதித்தனர். பாளையக்காரர்களை அடக்க இரு முறை பறங்கிப் பட்டாளம் படையெடுத்தது. மைசூரிலிருந்தும்கூட படைகள் வரவழைக்கப்பட்டன. காடுகளிலும் மலைச்சாரல்களிலும் கோட்டைகளிலும் மறைந்து மறைந்து எட்டு மாதங்கள் விட்டு விட்டுப் போராடினார்கள் விடுதலை வீரர்கள். ஆனால் ஒழுங்கான ராணுவப் பயிற்சி பெறாத பாளையக்காரர்களின் வீரர்களால் நாலாயிரத்துக்கு மேற்பட்ட காலாட்படைகளையும் குதிரைப் படைகளையும் கொண்ட ஏகாதிபத்திய சேனையை முறியடிக்க முடியாமற் போயிற்று. தனி மனிதர்கள் எவ்வளவுதான் வீர உணர்ச்சி படைத்தவர்

வே. 2