பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலூரின் விழுப்புகழ்

21


பெயருக்கு முன் நின்று சிறப்பிக்கும் அடைமொழியால் விளங்குகின்றது. வலிமை பொருந்திய ஓவியர் குடியில் பிறந்தமையால் 'உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்'5 என்று புலவர் பாடும் புகழ் பெற்ற இப்பெருந்தகை ஆண்டநாடு தற்போது தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள கிண்டிவனத்தைச் சூழ்ந்த நாடு என்பர்.6 இந்நாடு


5.

நன்மா விலங்கை மன்ன ருள்ளு
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்

உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்.

-சிறுபானுற்றுப்படை, 120-122

6. (i) ‘ஆவியரைப் போலவே ஓவியர் என்னும் வகுப்பாரும் இக்நாட்டில் இருந்தனர். சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக்கோடன் என்னும் சிற்றரசன் அவ்வகுப்பைச் சேர்ந்தவன். அவன் ஆட்சிபுரிந்த நாடு ஒய்மா நாடு என்று சாசனங்களில் குறிக்கப்படுகின்றது. ஓவியர் பெருமானாகிய குறுநில மன்னனால் நெடுங்காலம் ஆளப்பட்ட நாடு ஓவியர்மான் நாடு என்று பெயர் பெற்றுப் பின்னர் ஒய்மா நாடென்று சிதைத்திருத்தல் கூடும். திண்டிவனம், கிடங்கில் வயிரபுரம் முதலிய ஊர்கள் அந்நாட்டைச் சேர்ந்தனவாகும்’

——ஊரும் பேரும், பக்கம் . 96.

(ii) ஒய்மான் என்பது ஒய்மாநாட்டையுடையவன் என்று பொருள்படும். திண்டிவனத்தைச் சார்ந்த நாடு முற்காலத்தில் ஒய்மானாடென வழங்கிற்று. இதன்கண் மாவிலங்கை, வேலூர், எயிற்பட்டினம், கிடங்கில், ஆமூர் என்ற ஊர்கள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. நல்லியக்கோடன் மாவிலங்கையில் இருந்து கொண்டு இந்நாட்டை யாட்சி புரிந்து வந்தான்.”

-புறநானூறு, ஒளவை. சு. து. பதிப்பு, பக்கம் - 395