பக்கம்:வைணமும் தமிழும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வைணவமும் தமிழும்



6. பதினெண்ணாயிரப்படி : பெரிய பரகால சுவாமி என்பவர் ஆறாயிரப்படி என்னும் உரைக்கு ஒர் உரை வரைந்துள்ளார். இது 'பதினெண்ணாயிரப்படி' என வழங்குகின்றது. இதில் ஒவ்வொரு சொல்லுக்குப் பொருளும் ஒரு பாசுரத்தின் விளக்கமும் அமைந்துள்ளன.

உரைகளின் நயம் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் அருளிச்செய்யப் பெற்றது போன்றே, வியாக்கியானங்களும் இறைவனுடைய திருவருளுக்கு முற்றிலும் இலக்காய், ஆழ்வார்களின் பேரருளுக்குப் பாத்திர யூதர்களாய், வடமொழி, தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் பேரறிவுபடைத்தவர்களாய் இருந்த பெருமக்களால் அருளிச் செய்யப் பெற்றவையாதலின், திவ்வியப் பிரபந்தம் போன்றே வியாக்கியானங்களும் அருமை பெருமைகளையுடையன. இவ்வியாக்கியானங்கள் மணிப்பிரவாள நடையில் அமைந்தவை; சுவாதுபவத்தோடு செய்யப்பெற்றதாதலின், கற்போர்க்கும் சுவாதுபவத்தை விளைவிக்கக் கூடியவை.

இந்த உரைகளுள் ஈட்டின் நடையழகு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருளுணர்வோடு பயிலப் பயிலப் பேரின்பம் பயப்பது சொல்லாற்றல்கள், பொருளாற்றல்கள் அமைந்தது. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் என்னும் வனப்பு வாய்ந்தது; கூறப்புகும் பொருளை விளக்குவதற்குக் காட்டப் பெறும் மேற்கோள்கட்குப் பொருள்கூறும் முறை எத்தகையோரும் வியக்கத்தக்கது. பதச்சாரம் கூறுவதில் ஈட்டாசிரியருக்கு ஒத்தாரும் மிக்காரும் இத்தமிழ் நாட்டில் இலர். ஒரு பதிகத்தோடு, மற்றொரு பதிகத்திற்கும், ஒரு பாசுரத்தோடு,