பக்கம்:வைணமும் தமிழும்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
157
வைணவ ஆசாரியர்கள்

அம்மங்கி பெரிய முதலியார், ஏறு திருவுடையதாசர், பெரிய கோயில் வள்ளலார் சீடர்கள். வடக்குத் திருவீதிப்பிள்ளை, கந்தாடை தோழப்பன், பின்பழகிய பெருமாள் சீயர், ஈயுண்ணி மாதவப்பெருமாள், வாதிகேசரி அழகிய மணவாளசீயர், நடுவில் திருவீதிப் பட்டர், வேல்வெட்டிப்பிள்ளை, பெரிய வாச்சான்பிள்ளை, ஏறுதிருவுடையதாசர், சீனிக்கரபிள்ளை இராமாநுசாசார்யர், வானமாமலைதாசர், திருக்குருகூர்தாசர். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்: திருவாய்மொழிக்கு ஈடுமுப்பத்தாறாயிரப்படி, திருவிருத்தத்திற்கு ஈடு, கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு ஈடு, திருவாய்மொழிக்கு ‘இருபத்து நாலாயிரப்படி' என்னும் வியாக்கியானம் வரையுமாறு பெரியவாச்சான் பிள்ளைக்குக் கட்டளையிட்டார். நம்பெருமாள் நம்பிள்ளையைக் கடாட்சித்து அவரைத் தம்முடைய திருமுடிப்பக்கத்திலிருந்து திருவாய்மொழியை நிர்வகிக்குமாறு நியமனம் செய்ய, நம்பிள்ளையும் “நாயினேன் தேவரீருடைய நியமனத்தைத் தப்பமுடியாது. ஆகிலும் அவ்விடம் முன்பு துரியோதனன்பற்றிய இடமாலையாலே, அடியார்க்குப் பற்றும் இடம் ஆகாது” என்று விண்ணப்பம் செய்ய பெருமாளும் உகந்து அதை ஆமோதிக்க, அது கண்டு அங்கிருந்தோர் அனைவரும் வியப்பெய்தினர்.

(5).வடக்குத்திருவீதிப்பிள்ளை :(பிறப்பு. கி.பி.167-1285); ஐயாம்சம். திருவரங்கத்தில் பிள்ளை உலக ஆசிரியருக்கு திருமகனாய்த் திருவவதரித்தார். கோயில் வடக்குத் திருவீதியில் இவரது திருமாளிகை இருந்ததால் இப்பெயரால் வழங்கப் பெற்றவர். திருநட்சத்திரம்: ஆனி-சுவாதி. திருநாமங்கள் திராவிடவேதாந்த தேசிகர், ஸ்ரீகிருஷ்ணபாதர் தேவிகள்,