பக்கம்:வைணமும் தமிழும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

வைணவமும் தமிழும்


(6) வாதிகேசரி அழகிய மணவாளசீயர் : திருவாய் மொழிக்கு பன்னிறாயிரப்படி என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தவர். இவருடைய வாழ்க்கை வரலாறு சற்று வியப்பானது.

இவர் இல்லற வாழ்க்கையில் இருந்தபோது ஒரு நாள் ஓரிடத்தில் சேர்ந்து பயிலும் மாணவர்களைக் கண்டு அவர்கள் பயிலும் நூலைப்பற்றி வினவினார். அவர்கள் இவர் எழுத்து வாசனையற்றவர் என்பதை அறிந்தவர்களாதலின் முசலகிசலயம்? படிப்பதாகக் கூறினர். இப்படியும் ஒன்று உண்டோ? என்று திகைத்தவர், தமது ஆசிரியரான பெரியவாச்சான் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய அவரும் இதன் விளக்கத்தை அருளிச் செய்ய, பெருநாணமுற்ற இவர் தம் ஆசாரியரின் திருவடியில் வீழ்ந்து வணங்கி தம்மை வித்துவானாக்கும்படி வேண்டிக் கொண்டார்.

ஆச்சான்பிள்ளையும் திருவுள்ளம் உவந்து முப்பத்து இரண்டு அகவையில் இவரை மாணவராக ஏற்றுக்கொண்டு கல்வி கற்பித்தார். படிப்படியாக இவர்தம் அறிவை மலரச் செய்து இவரைக் காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் பூர்வ உத்தரமீமாம்சை முதலிய சகல சாத்திரங்களிலும் வல்லுநராகச் செய்தருளினார். இவரும் பிள்ளையவர்களின் திருவருளால் சிறந்த புலமையடைந்து தம்மை எள்ளி நகையாடிய மாணாக்கர்கள் வியந்து தலைகுனியும்படி ‘முசலகிசலயம் என்ற பெயரில் காவியம் ஒன்றையும் அருளிச் செய்தார். பின்னர் இல்லறவாழ்க்கையில் வெறுப்புற்று


2. முசலகிசலயம்-உலக்கைக் கொழுந்து, முசலம்-உலக்கை;

கிசலயம் - கொழுந்து - தளிர்.