பக்கம்:வைணமும் தமிழும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

195


ஆதியும் அந்தமும் இல்லாத இக்கால நியமத்திற்கு உட்பட்டே இக்கர்ம லோகத்திலுள்ள மாறுபாடுகள் எல்லாம் எம்பெருமான் சங்கற்பத்தினால் நடைபெறுகின்றன. காலம் நித்திய விபூதியில் (பரமபதத்தில்) நித்தியம். இந்த லீலா விபூதியில் (நம் உலகத்தில்) காலம் அநித்தியம், அதாவது பரமபதத்தில் காலம் நடையாடாது; இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற நிலைகள் அங்கு இல்லை; ஆகவே, நித்தியம், ஆனால் முன்பின் என்ற அளவிற்கு வேறுபாடு உண்டு. ஆயினும், அதன் சம்பந்தம் இன்றி அனைத்தும் எம்பெருமானது சங்கற்பத்தில் மட்டும் நடைபெறுவனவாகும். இந்த உலகில் இஃது அநித்தியமாதலால் இறப்பு, நிகழ்வு எதிர்வு என்ற பேச்சு உண்டு. இந்தக் காலம் ஈசுவரப்படைப்பின் பரிணாமங்கட்குக் காரணமாய், அவனுடைய படைப்பு அளிப்பு, அழிப்பு ஆகிய விளையாட்டுக் கருவியாய்ப் பயன்படுகின்றது.

சித்து, அசித்து என்ற தத்துவங்கள் எம்பெருமான் திருமேனியில் அடங்கியிருக்கும் நிலையை வேதாந்த தேசிகர். அழகாகப் பாசுரம் இட்டுக் காட்டுவர்.

         புருடன்மணி வரமாகப் பொன்றாமூலப்
         பிரகிருதி மறுவாக மான்தண் டாகத்
         தெருள்மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கள்
         சார்ங்கஞ்சங் காகமனம் திகிரி யாக
         இருடிகங்கள் ஈரைந்தும், சரங்க ளாக
         இருபூத மாலைவன மாலை யாகக்
         கருடன்உரு வாம்மறையின் பொருளாங்கண்ணன்.

. . . . . . . . . . . . . . . . . . . . . . .

10. தே.பி.80


10. தே.பி.80