பக்கம்:வைணமும் தமிழும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

வைணவமும் தமிழும்


என்று குறிப்பிடுவர். “சீமந்நாராயணன் ஒருவனே நமக்கு எல்லா வித உறவினன் நம் அஞ்ஞானத்தை ஒழிக்க கூடிய கருணைக் கடல்; தனது சங்கற்பத்தாலே அனைத்தையும் தாங்கி நிகரற்று நிற்பவன்; பெரிய பிராட்டியார் நமக்குப்புருஷ காரமாய் நின்று பரிந்து பேச, நம்மிடம் பின்னும் கருணை வளரப் பெற்றவன். இத்தகைய எம்பெருமான் வேறு உபாயத்தைக் கடைப்பிடிக்க ஆற்றல் இல்லாது பிரபத்தியை அநுட்டிப்பவர்கட்கு மற்ற உபாயத்தின் இடத்தில் நின்று பலன் கொடுக்கும் சித்தோ பாயமாகின்றான்” என்பது இதன் பொருள்.

இந்த நெறி ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்கு காணப்பெறுகின்றது.

          வீடாக்கும் பெற்றி
              அறியாது மெய்வருத்திக்
          கூடாக்கி நின்றுண்டு
              கொண்டுழல்வீர்!- வீடாக்கும்
          மெய்ப்பொருள்தான் வேத
              முதற்பொருள்தான் விண்ணவர்க்கு
          நற்பொருள்தான் நாரா
              யணன். (நான். திருவந் 13)

    [வீடு-மோட்சம்; பெற்றி - உபாயம்; கூடு எலும்புக்கூடு
    மெய்ப்பொருள்-இறைவன்; விண்ணவர்-நித்தியசூரிகள்]

என்ற பாசுரத்தில் திருமழிசைபிரான் எம்பெருமானைச் சித்தோபாயமாக காட்டுவதை அறியலாம். பரமபத நாதனையே


2. புருஷகாரமாய்-தகவுரைதருபவளாய்

3. பிரபத்தி-சரணாகதி.