பக்கம்:வைணமும் தமிழும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

263


இன்பம் தருவது. “பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்ற சுந்தரமூர்த்தி அடிகளின் திருவாக்காலும் பக்தர்களின் மேம்பாட்டினை உணரலாகும். குலசேகரப் பெருமாளும் “பேதைமா மணவாளன் தன் பித்தனே’ (பெருதிரு. 3:5)”எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே’ (3:6) “பித்தனாய் ஒழிந்தேன்” (3:7) “பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே” (3.8) என்ற அவர்தம் வாக்குகளால் தம்மைப் “பித்தன் என்றும், பேயன் என்றும் கூறிக் கொள்வதனால் இதனை மேலும் தெளிவு பெறலாம். இந்தப் பக்தி நிலையை மெய்விளக்க அறிஞர்கள் ‘பக்தியோகம்’ என்று வழங்கி அதனை எட்டு அங்கங்களாக முறைப்படுத்தி வகுத்துக் காட்டுவர். இதனை,

          எமநியம ஆசனங்கள்
              இயல்ஆவி புலனடக்கம்
          தமதறியும் தாரணைகள்
              தாரையறா நினைவொழுக்கம்
          சமமுடைய சமாதிநலம்
              சாதிப்பார்க்கு இலக்குஆகும்
          அமரர்தொழும் அத்திகிரி
              அம்புயத்தாள் ஆரமுதே5

     [தாரை அறா இடைவிடாத சாதித்தல் அநுட்டித்தல்;
     அம்புயத்தாள் - பெரிய பிராட்டியார், ஆர் அமுது -
     அருளாளன்!]

என்று விளக்குவர் வேதாந்த தேசிகர்.


4. தேவாரம் 7.39;10

5. தே.பி. 254