பக்கம்:வைணமும் தமிழும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

வைணவமும் தமிழும்


தோன்றுகின்றது. வானநூல் அறிஞர் பூமியின் சிறுமையையும், அதனை ஈர்த்து நிற்கும் கதிரவனின் பெருமையையும் உணர்வதுபோல் பக்தர்களும் சமுசாரத்தில் உழலும் தம் ஆன்மாவின் சிறுமையையும் எல்லா உயிர்களையும், புரக்கும் இறைவனின் பெருமையையும் உணர்கின்றனர். இந்நிலையில் சீவான்மா பரமான்மாவுடன் கலக்கின்றது. அப்பொழுது அது கடலில் கிடக்கும் கடற்பஞ்சு போன்ற நிலையினை அடைகின்றது.

(ஈ).பக்திநிலையின்பிரிவுகள்: இந்த பக்தி நிலையையும் பரபக்தி, பரஞானம், பரமபக்தி என்ற பிரிவுகளாக வேறுபடுத்திக் காட்டும் மரபும் உண்டு.இந்த நிலையை ஆழ்வார்பாசுரங்களில் ஆங்காங்குக் காணலாம். பரபக்தி என்பது எம்பெருமானை நேரில் காணவேண்டும் என்கின்ற ஆவல் : அவனை நேரில் காணல். பரஞானம் பின்பு மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல் பரமபக்தி என்பதை அறிதல் வேண்டும். மற்றொரு விதமாகவும் பண்டைய ஆசிரியர்கள் இவற்றை விளக்குவர், எம்பெருமானோடு கலந்த போது சகிக்கும்படியாகவும், பிரிந்தபோது துக்கிக்கும்படி யாகவும் இருக்கும் நிலை 'பரபக்தி’; எம்பெருமானுடைய முழு நிறைவு நேர்காட்சி 'பரஞானம்'; அவனுடைய அநுபவம் பெறா விடில் நீரைவிட்டுப் பிரிந்த மீன்போல் மூச்சு அடங்கும்படி இருத்தல் ‘பரம பக்தி' என்று விளக்கம் தருவர் அவர்கள்.

இம் மூன்றுநிலைகட்கும் முறையே பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். ஆகிய மூன்று பெருமக்கள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர். ஆயினும் இம் மூன்று நிலைகளும் இம் மூவர்க்கும் தனித்தனியே குறைவின்றி