பக்கம்:வைணமும் தமிழும்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - மேலும் சில

327


          தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
              திகழ்திருச் சக்க ரத்தின்
          கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
             குடிகுடி யாட்செய் கின்றோம் (7)

   [செஞ்சுடர்-சிவந்த ஒளி, ஆழி வட்ட வடிவமான பொறி,
   அடையாளம்,ஒற்றுண்டு அடையாளம் செய்யப்பெற்று:
   குடி-குடி வழிவழியாக ஆட்செய்தல் அடிமை செய்தல்]

என்று பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் குறிப்பிட்டுள்ளதை அறியலாம். புண்ட்ரமாவது, நெற்றி முதலிய பன்னிரண்டு இடங்களில் மேல்நோக்கி இடுக்கின்ற திருமண்காப்புகள். ‘நாமம் TITL9, இராமாநுசதாசன் என்ற தாஸ்ய நாமத்தை பெறுதல். யாகம் என்பது பகவதாராதனமாகும். மந்திரம் என்பது எட்டெழுத்து மந்திர உபதேசம் பெறுதல்.ஓவிய வடிவம் அல்லது திருமேனி வடிவமாக இருக்கும் எம்பெருமானை ஆராதிப்பது சிறந்த பல யாகங்களைச் செய்வதிலும் மிக்கது. கற்புடை மகளிர்க்கு மாங்கல்யம் முதலியவற்றை அணிந்து கொள்ளல் இன்றியமையாததுபோல் ஸ்ரீவைணவரா யிருப்பவர்க்கு பஞ்சசமஸ்காரம் இன்றியமையாதது. இதனை ஓர் ஆசாரியன் மூலம் பெறுதல் வேண்டும்.

3. திருமண்காப்பு: இது வைணவர்களின் சமயக்குறி. எம்பெருமானின் வியூகநிலைகளை விளக்கும்போது’ பன்னிரண்டு கிளை வியூகங்கள் குறிப்பிடப்பெற்றன. இந்தப் பன்னிருவரும் திருமாலடியார்களின் திருமேனியில்


1. வைணவ சமயத் தத்துவம்-வியூக நிலை காண்க. இந்நூல் பக் 199-200