பக்கம்:வைணமும் தமிழும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

47



‘இராமாதுச நூற்றந்தாதி' சேர்ந்த திவ்விய பிரபந்தம் இருபத்து நான்கினில் இயற்பாப் பிரபந்தங்கள் பதினொன்று. இவற்றுள் கட்டளைக் கலித்துறைப் பாசுரங்களால் அமைந்தனவும் இசைக்குச் சேர்ந்தனவும் ஆகவுள்ள திருவிருத்தம் (நம்மாழ்வார்), இராமாதுசநூற்றந்தாதி (அமுதனார்)ஆகியவை இயற்பா என்றே பெயர் பெறுகின்றன. மற்றும், இயற்பா தொகுதியில் அதே பாசுரமாக்வுள்ள திருவெழுக்கூற்றிருக்கை ‘சிறிய திருமடல்’, ‘பெரிய திருமடல் ஆகிய மூன்றைத் தவிர ஏனைய எட்டுப் பிரபந்தங்களும் அந்தாதிப் பிரபந்தங்களாகும். ‘இராமாநுச நூற்றந்தாதி, மட்டிலும் கட்டளைக் கலித்துறைப் பாசுரங்களால் அமைந்தது. ‘திருவிருத்தமும்' கட்டளைக் கலித்துறைப் பாக்களால் அமைந்த அந்தாதிப் பிரபந்தமாக இருப்பினும் அதனை அந்தாதி எனப் பெயரிட்டு வழங்குதல் இல்லை. அந்தாதிப் பிரபந்தங்களைத் தொடர்நிலைச் செய்யுள் வகையில் 'சொற்றொடர் நிலைச் செய்யுள்' என வழங்குவர். இவை தொல்காப்பியர் கூறும் விருந்து என்ற வகையில் அடங்கும்.[1] மேற்கூறப்பெற்ற எட்டு அந்தாதிப் பிரபந்தங்களில் முதலாழ்வார்கள் அருளிய மூன்று அந்தாதிகள், நான்முகன் திருவந்தாதி, பெரிய திருவந்தாதி ஆகிய ஐந்தும் வெண்பா அந்தாதிகள். இராமாதுச நூற்றாந்தாதி மட்டிலும் கலித்துறை அந்தாதி திருவாசிரியம் திருவெழுக் கூற்றிருக்கை ஆகிய இரண்டும் ஆசிரியப்பாவால் அமைந்த பிரபந்தங்களாகும். திருவாசிரியம் அந்தாதிப் பிரபந்தமாகும். இஃது அந்தாதிப் பிரபந்தமாக அமைந்திருப்பினும் இயற்பாவிலுள்ள ஏனைய அந்தாதிப் பிரபந்தங்களைப்போல இறுதியும் முதலும்


  1. தொல். பொருள் செய்யு-நூற்பா 551 (பேராசிரியர் உரை).