பக்கம்:வைணமும் தமிழும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வைணவமும் தமிழும்



அவன் சித்தோபாயமாக[1] இருப்பவன். அதனால் அவனைத் தாமதித்து அநுபவிக்கக் காரணம் இல்லை. 'அவனே உபாயம்' என்ற கோட்பாட்டையும் மீறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெறவேண்டும் என்ற பதற்றத்தை உடையவளாக இருப்பவள் இவள். இந்த மனநிலை தான் 'மகள்' (தலைவி) என்று குறிப்பிடப் பெறுகின்றது. ஆழ்வாரின் மகள் பாசுரங்களாக உள்ள பதிகங்கள் யாவும் இந்த நிலையையே குறிக்கின்றன. இந்த மூன்று நிலைகளும் தோன்றுவதை ஆசாரியஹிருதம் விளக்குகின்றது. .

திருவாய்மொழியில் மகள் பாவனையில் நடைபெறும் பதிகங்கள் பதினேழு.[2] இவற்றுள் தூதுப் பதிகங்களாக நடைபெறுபவை நான்கு[3] எடுத்துக்காட்டாக "ஊரெல்லாம் துஞ்சி” (54) என்ற திருவாய் மொழியில் முதல் பாசுரம் :

ஊரெல்லாம் துஞ்சி
உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர்
நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம்
பாம்பணையான் வாரானால்
ஆர்எல்லே வல்வினையேன்
ஆவிகாப் பார்இனியே (1)

[துஞ்சி-உறங்கி, நீண்டது-நெடுகிச் சென்றது; ஆல்அந்தோ பார்-பூமி, பாம்பணையான் - சேஷசாயி, ஆவி - உயிர்]


  1. சித்தோபாயம்-முன்னமே இருக்கும் உபாயம்; அஃதாவது இறைவனாகிய உபாயம்.
  2. திருவாய்: 1,4;2.4;4.8;5.3;5.4;5.5;5.9;6.1;6.2;6.8; 7.3; 8,2;9.5:97,9,8.9.9.10.3 என்பவை.
  3. திருவாய் 1.4;6.1;6.3;9.7என்பவை