பக்கம்:வைணமும் தமிழும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

71



“பிரளய ஆபத்தில் வந்து உதவினவன் என்னைக் காதல் நோயாகிய பிரளயம் நோக்க வந்து உதவாத பின்னர், இனி நான் பிழைத்திருத்தல் என்பது ஒருபொருள் உண்டோ?" (ஈடு) என்று தான் வாழ்வதில் நசை அறுக்கின்றாள் பாரங்குச நாயகி.

“ஊராருடைய பழிமொழியே எருவாகத் தன்னுடைய காதல் வளருவதாகையாலே அந்த எருவுக்கு அவகாசம் இல்லாத படி ஊரெல்லாம் துஞ்சிற்றே!” என்று வருந்துகின்றாள்."பண்டு இராமாயணப் பெரும்போரில் நாகபாசத்தால் கட்டுண்ட அன்று ஒரு சாம்பாவன், மகராசர் (சுக்கிரீவன்), தொடக்கமானார் உணர்ந்திருந்தார்கள் அன்றோ? இங்கு அங்ஙனம் ஒருவர்கூட இலராயினரோ, பழிசொல்லுவார்,இதம் சொல்லுவார், சாத்துணையாவார் இவர்கள் எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள்” என்கின்றாள்.

“ஊரை விட்டு வெளியே சென்று தரிக்கைக்கும் அவகாசம் இல்லாமல் உலகெல்லாம் நள்ளிருளாயிற்று. கண்ணாலே ஒரு பொருளைக் காணமுடியா நிலையாயிற்று. நீரில் வாழும் பிராணிகள் அனைத்தும் ஆழ இழிந்து அங்குள்ள ஒலியும் அடங்கிற்று. இரவு-பகல் என்ற வேற்றுமையின்றி ஒரே காளராத்திரியாயிற்று, மானிடர்களுடைய இரவைக் காட்டிலும் தேவர்களுடைய இரவுக்கு அதிக நீட்சியுண்டு, அதனினும் விஞ்சிய நீட்சியாயிற்று”என்கின்றாள்.

“இந்த நிலையில் பரம காருண்யரான அந்தப் பாம்பனையானும் வாரா தொழிந்தான். பிரளயாபத்து வந்தவாறே உலகங்களையெல்லாம் திருவயிற்றில் வைத்துப் புரக்கும் பெருமான் இப்பேராபத்தில் வந்து முகங்காட்டி உதவுகின்றீலன்.