பூம்புகார் பிரசுரம்
109, மன்னார்சாமி கோவில் தெரு,
சென்னை 600013
விலை ரூ.8-90
மத்திய அரசு சலுகை விலையில் வழங்கிய தாளில்
இந் நூல் அச்சிடப் பெற்றுள்ளது.
வெளியீடு எண் : 43
முதற் பதிப்பு : மே, 1977
முழு உரிமையும் பூம்புகார் பிரசுரத்தாருடையது
அச்சிட்டவர்கள்:
நாதன் & கம்பெனி, மெயின்ரோடு, வேளச்சேரி, சென்னை - 600042.
கவியின் கனவு
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியிற் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும் !
பதிப்புரை
மகாகவி பாரதியார் எழுதிய அனைத்துக் கதைகளையும் தொகுத்து பாரதியார் கதைகள் என்ற பெயரில் ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறோம்.
எந்தக் கருத்தை எப்படிச் சொன்னால் பாமரமக்கள் ரஸிப்பார்கள் என்ற
கலை நுட்பத்தை மகாகவி அறிந்து, அதற்கேற்பத் தமது கதைகளைக்
கதைகளைக் கவியாற்றலுடன் புனைந்துள்ளார் என்பதை அவருடைய இனிய கதைகளைப் படிப்போர் உணர்வர்.
உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டு நேரான தமிழ் நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை என்று சொல்வது பொய்யில்லை, முக்காலும் உண்மை.
மூடி மறைத்தல், சுற்றி வளைத்து எழுதுதல் ஆகியன பாரதியாருக்கு உடன்பாடன்று என்பதையும் இக் கதைகள் நமக்குத் தெளிவாக்குகின்றன.
பாரதியார் தாம் எடுத்துக்கொண்ட பொருளை மக்கள் உள்ளத்தில் ஊருவிப் பாய்ந்து தொழிற்படும் முறையில் கதைகள் மூலம் உணர்த்தினார். அது மட்டுமல்ல - பாரதியார் பாமரமக்களின் உள்ளத்து எழுச்சி களையும், உணர்ச்சிகளையும் தம் கதைகளிலே எதிரொலிக்கவும் செய்தார்.
பாரதியார் எழுதிய கதைகள் எல்லாமே ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புக் கொண்டவை. அறிவு விளக்கம் தருவதையே தமது நோக்கமாகச் கொண்டிருந்தார் மகாகவி. அவர் வெறும் பொழுதைப் போக்குவதற்காக கதைகள் எழுதவில்லை. நீதியும் தர்மமும் நிலைப்பதற்கென்றே பல கதைகளை எழுதினார்.
தமிழ் இலக்கிய உலகில் என்றும் ஒளியோடும் சிறப்போடும் திகழும் கதைப் பொக்கிஷம் பாரதியார் கதைகள் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.
அன்புள்ள
பூம்புகார் பிரசுரத்தார்