பெருங்கதை/1 44 பிடி ஏற்றியது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

1 44 பிடியேற்றியது

மங்கையர் கலக்கம்[தொகு]

எரிதலைக் கொண்டாங் கெயிலக மெரியப்
புறமதிற் சேரிப் பூசலு மார்ப்பும்
உறுநீர்ப் பெருல்கட லுவாவுற் றாஅங்
காகுலம் பெருகலி னருந்துறை தோறும்
போகா தாடுநர் புன்க ணெய்தி 5
மேகலை விரீஇய தூசுவிசி யல்குல்
நீருடை களைதல் செல்லார் கலங்கிக்
கானிரி மயிலிற் கவின்பெற வியலி
அயிலிடு நெடுங்க ணரும்பணி யுறைத்தா
உயிரேர் கணலரைத் தானை பற்றி 10
நல்லது தீதென் ற்றியா தவ்வழிச்
செல்வது பொருளோ செப்பீ ரோவென்
றல்லல் கூர வலமரு வோரும்
மாக்குருக் கத்தியொடு மல்லிகை மணந்த
பூப்பெரும் பந்தர் நூற்றிரை வளைஇய 15
காற்பெரு மாடங் காற்றொடு துளங்க
விண்ணுலகு பெறினும் விடுத்தற் காகாப்
பண்ணியல் பாணி நுண்ணிசை யோர்வார்
ஊரக வரைப்பி னொல்லென வெழுந்ததோர்
பூசலுண் டெனலும் பொறையுயர் மாமலை 20
வேயுயர் பிறங்கற் சேயுயர்ந் தோடும்
சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர்
புதல்வரை யொழிந்தியாம் போந்தன மேயென
அதிர்வனர் நடுங்கி யழலி னுயிர்த்துத்
திதலை யவ்வயி றங்கையி னதுக்கி 25
உதிர்பூங் கொம்பி னொடுங்கு வோரும்
குட்ட மாடிக் குளிர்ந்த வருத்தம்
அட்டுப்பத மாக வறிந்தோ ரமைத்த
மட்டுமகிழ்ந் துண்ணு மாந்த ரவ்வழிப்
பட்ட தென்னெனப் பசும்பொனி னியன்ற 30
வட்ட வள்ளம் விட்டெறிந்து விதும்பி
எழுந்த கம்பற் கியைந்து செல்வோரை
அழிந்த தில்லை யறிந்தேம் யாமென
மொழிந்திடை விலங்கி முன்னிற் போரும்
கம்மப் பல்கலம் விம்மப் பெய்த 35
பொறியமை பேழையொடு பீந்துகி றழீஇக்
குறிவயி னின்ற குறள்வயி னோக்கார்
சோருங் கூந்தலர் வாருங் கண்ணினர்
ஆருந் துன்பமொ டூர்வயி னோக்கி
வீழ்பூங் கொடியின் விரைந்துசெல் வோரும் 40
பழிப்பின்று புனைந்த பட்டணைப் படுகாற்
கழிப்பட மாடங் காலொடு துளங்க
விழிப்பின் மேனிதம் மின்னுயிர் விடுமென
வேகப் புள்ளின் வெவ்விசை கேட்ட
நாக மகளிரி னடுங்கு வோரும் 45
ஓடுவிசை வெங்காற் றுருமொ டூர்தரப்
பாடற் றண்ணுமைப் பாணியிற் பிழையா
நாடன் மகளி ரரங்கம் புல்லெனச்
சுவைசோர்ந் தழிய நவைகூர்ந்து நடுங்கி
மஞ்சிடைப் புகூஉ மகளிர் போலத்தங் 50
கஞ்சிகை யெழினியிற் கரந்துநிற் போரும்
நடுங்கு வோரு நவையுறு வோரும்
ஒடுங்கு வோரு மொல்கு வோரும்
இனைய ராகத்தம் புனைநலம் புல்லென
நங்கையுஞ் ணேயணம் மிறைவனு நண்ணான் 55
என்கொ லீண்டுநம் மின்னுயிர்த் துணையென
மங்கைய ரெல்லா மம்ம ரெய்தக்

அறிஞர் கூற்று[தொகு]

கணிகை யிரும்பிடி யணிநல நசைஇயப்
பிடியொடு போந்த பெருங்களிற் றொருத்தலை
வீரிய விளையர் வாரியுள் வளைஇ 60
மதந்தலை நெருங்கி மதக்களிறு வலியாக்
கதந்தலை யழியக் கந்தொ டார்த்துச்
சாம கீத வோசையிற் றணிக்கும்
நூலறி பாகரொடு மேலறிவு கொள்ளா
நிகழ்ச்சியின் விட்ட விறைவன் போல 65
மகிழ்ச்சி யெய்தி மணிமுடி வேந்தன்
வத்தவ ரிறைவனை விட்டன னுழிதரல்
நீதி யன்று நெறியுணர் வோர்க்கென
ஓதிய லாள ருடலுந ருழிதரப்

அரசன் செயல்[தொகு]

பௌவ மெல்லாம் படரு மீண்டெனக் 70
கௌவை வேந்தனுங் காற்றொலி யஞ்சி
யானையி னருஞ்சிறை வளைஇ யதனுணம்
சேனையு முரிமையுஞ் ச்றிக வந்தெனப்
பிறிதிற் றீரா நெறியின னாகக்

யானைகளின் செயல்[தொகு]

காற்றொடு கலந்த கார்முழக் கின்னிசை 75
மாற்றுக்களிற் றெதிர்வென மறித்தன மயங்கி
அந்தப் போதிகை யிடைபரிந் தழியக்
கந்துமுதல் கிழித்துக் காரென வுரறி
மேலியன் முறைவர் நூலிய லோசை
எஃதெறிந் தன்ன வெஃகறு செவிய 80
அடக்கவு மடங்காப் புதுக்கோள் யானை
வால்வளை மகளிரொடு மைந்தரை யுழக்கி
ஏரிருங் குலிகப் புனல்பரந் திழிதரும்
காரிருங் குன்றிற் கவின்பெறத் தோன்றக்

நளகிரியின் செயல்[தொகு]

கொன்னே சிதைந்து கோவின் குறிப்புடன் 85
நகரி முழக்கினு மிகையெழு தீயினும்
அளவி லார்ப்பினு மருந்தளை பரிந்து
கடலென வதிர்ந்து காரெனத் தோன்றி
விடலருஞ் சீற்றமொடு வேறுபட நோக்கிக்
களமெனக் கருதிக் கனன்ற வுள்ளமொடு 90
நளகிரிக் கூற்ற நகர முழக்க
எதிரெழு வோரை யதிர நூறி
வத்திவர் கோமான் வயவர் திரிதர
எத்திசை மருங்கினு மட்குவரத் தோன்றிய

அரசன் செயல்[தொகு]

இன்னாக் காலை யொன்னா மன்னனும் 95
தன்னாண் டொழிற்றுணி வெண்ணு மாயினும்
செறியக் கொள்ளுஞ் செய்கை யோரான்
அறியக் கூறிய வன்பின னல்லதைத்
தன்வயி னின்றுதன் னின்னியங் கொள்ளும்
என்மக ளுள்வழி யிளையரொ டோடிக் 100
காவ லின்றுதன் கடனெனக் கூரி
மத்தவன் மான்றேர் வத்தவற் குரைமெனப்
பாய்மான் றானைப் பரந்த செல்வத்துக்
கோமான் பணித்த குறைமற் றிதுவென
ஏவ லிளைய ரிசைத்த மாற்றம் 105

உதயணன் செயல்[தொகு]

சேதியர் பெருமகன் செவியிற் கேட்டு
விசும்புமுதல் கலங்கி வீழினும் வீழ்க
கலங்க வேண்டா காவலென் கடனெனக்
காற்றிற் குலையாக் கடும்பிடி கடைஇ
ஆற்றுத்துறை குறுகிய வண்ணலைக் கண்டே 110

காவலர் உதயணனிடம் கூறல்[தொகு]

காவன் மாக்களுங் காஞ்சுகி முதியரும்
ஏவ லிளையரு மெதிரெழுந் தோடி
மாடமுங் கடையு மதிற்புறச் சேரியும்
ஓடெரி கவரலி னூர்புக லாகாது
வையமுஞ் சிவிகையுங் கைபுனை யூர்தியும் 115
காற்றுப்பொறி கலக்க வீற்றுவீற் றாயின
போக்கிட மெங்கட்குப் புணர்க்க லாகா
தாக்கிட மெமக்குமுண் டாக வருளி
ஆய்ந்த நல்யாழ்த் தீஞ்சுவை யுணர்ந்தநின்
மாணாக் கியையெம் மன்னவ னருளால் 120
இரும்பிடி நின்னொ டொருங்குட னேற்றிக்
கொடுக்குவ வேண்டுமென் றெடுத்தெடுத் தேத்தி
அருந்திறற் காவல ரச்ச மெய்திப்
பெருந்திறன் மன்னற்குப் பணிந்தன ருரைப்ப

உதயணன் செயல்[தொகு]

எவ்வா யமரு மின்மொழிக் கிளவி 125
அவ்வாய் மங்கல மாகென விரும்பிக்
கவ்வையும் பெருகிற் றுய்தலு மரிதே
இவ்வழி மற்றிவ ணிற்றலு மேதம்
வருக வீண்டென வத்தவன் வலிப்பத்
தவாஇக் காதலொடு தகையாழ் காட்டும் 130
உவாத்தி யாதலி னுறுதியு மதுவெனச்
செய்கையி னறியாச் சிதைவிற் றாகிக்
கௌவை யெரியுங் காற்றினொ டெழுந்த
தரிமா னன்னநம் பெருமாற் சேரத்
திருமா நுதலியைத் தீதொடு வாரா 135
துதயண குமர னொருபிடி யேற்றிப்
போவது பொருளெனக் காவல ரிரப்பப்
பெரியோர்க் குதவிய சிறுநன் றேய்ப்பக்
கரவாது பெருகிக் கையிகந்து விளங்கும்
உள்ளத் துவகை தெள்ளிதி னடக்கி 140
மதர்வை வண்டொடு சுரும்புமணந் தாடும்
குயில்பூங் கோதையொடு குழற்குரல் வணரும்
கயிலெருத் திறைஞ்சிக் கானிலங் கிளைஇ
உருகு நெஞ்சத் துதயண குமரனைப்
பருகும் வேட்கையள் பையுள் கூர 145
நிறையு நாணு நிரந்துமுன் விலங்க
நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந் துரையா
அஞ்சி லோதியை நெஞ்சு வலியுறப்
பயிற்சி நோக்கி னியற்கையிற்றிரியாக்
காஞ்சன மாலை காயிசைத் தொருங்கே 150
ஏந்தின ளேற்ற விரும்பிடி யிரீஇ
முடியா வாள்வினை முடித்தன மின்றென
வடியேர் தடங்கண் வாளென மிளிரும்
கொடியேர் சாயலைக் குடங்கையிற் றழீஇப்
பிடியேற் றினனாற் பெருந்தகை யுவந்தென். 155

1 44 பிடியேற்றியது முற்றிற்று.