உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகவி பாரதியார்/பாரதியார் முன் இரு பிரசங்கங்கள்!

விக்கிமூலம் இலிருந்து

பாரதியார் முன்
இரு பிரசங்கங்கள் !



சமரசசன் மார்க்கசங்கக் கட்டி டத்தில்
தகுதிரு வி. கவியாண சுந்த ரர்தாம்,
அமைவுடைய இளங்கோவின் கவிந யத்தை
அமுதம்போல் எடுத்துரைத்தார் பிரசங்கத்தில் !
தமைமீறிப் பொங்கியெழும் சந்தோ ஷத்தால்,
தடதடெனக் கரகோஷம் செய்தார் ஐயர் !
நமதுதமிழ் இனிமைதனைக் கண்டுகொள்க
நானிலமே என்றன தம் விழியும் மார்பும் !
அடுத்தபடி வேறெருவர் பிரசங் கித்தார்;
அவர் கோணிக் குரங்குபோல் ஆடி ஆடி,
எடுத்தெடுத்துப் பாடினார் தாயுமானார்
எழிற்பாட்டை அழுகுரலில் ! அவர், சனத்தைப்
படுத்தாத பாடில்லை ! கோபத் தாலே
பாரதியார் 'யாரடா இவன்' என்றார். நான்
தடுத்துவிட்டேன் ! எழுந்திரென்றார். ததாஸ்து சொன்னேன்.
சபைத்தலைவர், பிரசங்கி சபையில் மீந்தார்!