உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகவி பாரதியார்/பாரதியார் சமத்வ உள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

பாரதியார்
சமத்வ உள்ளம்



யானும் கோஷும் பேசியிருந்தோம்,
என்றார் பாரதியார் என்னிடத்தில் !
வெளியிற் சென்று வீடு வந்தவர்
மேலுடை கழற்றவும் இல்லை; மேலும்,
ஐயர் கண்களில் அழகு குறைந்ததால்
அங்கு நடந்ததைக் கேட்டேன் ஐயரை !
எல்லாரும் சமம் இல்லையா என்றார்.
என்ன நடந்த தென்றேன். ஐயர்,
ஒன்று மில்லை உட்கார் என்றார்.
உட்கார்ந்திட்டோம் ஐயரும் நானும் !
யானும் கோஷும் பேசி யிருக்கையில்,
எவனோ கோஷின் காலில் விழுந்தான்.
"நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச்
சீரும் சிறப்பும் தேட லாமே"
என்றுசொன்னார் கோஷ் என் னிடத்தில்.
மரியாதை எனல் உண்டு;
பெரியார் சிறியார் இல்லைஎன் றாரே !