முதுமொழிக்காஞ்சி, 1919/அரும்பதவுரை
முதுமொழிக் காஞ்சி
அரும்பதவுரை.
அறத்தாறு—அறத்தின் நெறி—v. 8.
ஆசாரம்—ஒழுகும் ஒழுக்கம்—iii. 8.
ஆண்மை—ஆண் வினைத் தன்மை
—பௌரஷம்—வீரம்—ii. 10.
ஆர்கலி—கடல்.
இசை—புகழ்—vi. 8.
இளிவரவு—கீழ்மை—vi. 9.
ஈரம்—உயிர்களிடத்தில் உள்ள அன்பு—ii. 1.
.—மனத்துள் ஈரம்—v. 3;: viii. 3.
உட்கு—மதிப்பு—அச்சம்—ix. 9.
உறழ்—கலகம்—viii. 2.
ஊங்கு—மேல்—vi. 9.
எச்சம்—ஆக்கம்—செல்வம் vi. 8
எதிர் கோள்—முற்கொண்டு பாதுகாக்கும் காப்பு—ii. 5.
ஏற்றம்—உய்த்தல்—ஒரு காரியத்தை ஆராய்ந்து
முடிக்கும் வல்லமை—ii. 5.
ஏமம்—பாதுகாத்தல்—x. 9.
ஒப்புரவறிதல்—செயக் கடவன செய்கை—vi.2.
ஓங்கல்—உயர்வு—x. 1.
ஓதல்—நூல்களைக் கற்றல்—i. 1.
கண்ணஞ்சப்படுதல்—பிறர் அஞ்சி நடக்கத் தக்க
நன்குமதிப்பு—i. 2.
கண் மாறல்—கண்ணோட்டமொழிதல்—iv. 7.
கதம்—வெகுட்சி—கோபம்—iv. 9.
காத்தல்—ஒளித்தல்—vi. 5.
கழிதறுகண்மை—மிக்க வீரம்—iv.2.
கற்பு—கல்வியுடைமை—i.7.
காட்சி—அறிவு—ii. 4.
காதல்—விருப்பம்—i.2.
கிளை—சுற்றம்—v.3.
குத்திரம்—படிறு—வஞ்சகம்—ii. 7.
குறளை—குறளைச் சொல்—கோட் சொல்—viii.4.
கேளிர்—உறவினர் (நட்பினர்)—iii. 7.
கையுறல்—கரும முடிதல்—vii.4.
சாக்காடு—மரணம்—vi.6
சிதடி—மையற்றன்மை—அறிவின்மை—iv. 5.
சிறந்தன்று—சிறந்தது—i.1.
சிற்றில்—சிறுமையுடைய குடி—ii.6.
சீருடையாண்மை-புகழுடைய ஆண் வினைத்
தன்மை—ii. 10.
சூழ்ச்சி—ஆராய்தல்—x. 5.
செரு—போர்—viii.2.
செறுத்தல்—தண்டித்தல்—i.9.
செற்றார்—பகைவர்—i.9.
செற்று—உட்பகை கொண்டு—ix.3.
சொலவு—சொல்லிய சொல்—ix. 7.
சொன்—புகழ். சொன்மலை—மலை போன்ற புகழ்-v. 4.
சொற்சோர்வு—சொல்ல வேண்டுவதனை
மறப்பான் ஒழிதல்—ii. 8.
சோரா—இளையாத—உறுதியுள்ள—ii. 3.
சோரா—நெகிழ விடாத—உதவாத—v. 4.
சோர்வு—வழுவுதல்—தவறு—ii. 8.
தகுவரவு—தகுதி—vi. 2.
தண்டான்—ஒழியான்—மாறான்—களையான்
—தவிரான்—நீக்கான்—x.
தனிமை—தனித்திருத்தல்—iv. 8. வறுமை—iv. 10.
தற்செய்கை—தன்னைப் பெருகச் செய்தல்—i. 9.
தாரம்—மனையாள்—v. 1.
துவ்வாது—நீங்கியொழியாது—iv
நசை—ஆசை—vi. 7, vii.9.
விருப்பமாகிய பொருள்—viii. 3
நலன்—அழகு—i. 6.
நல்குரவு—தரித்திரம்—vi. 7.
நல்கூர்ந்தன்று—வறுமையுறும்—ix
நாண்—செய்யத் தகாதனவற்றின் கண்
உள்ளமொடுங்குதல்—i. 6.
நீர்—(நீர்மை)—குணம்—v. 1.
நேராத—உடன்படாத —v. 5.
நேராமல்—ஒன்றுங்கொடாமல்—v. 6.
நோனாதோன்—பொறாதவன்—vii. 7.
வேண்டாதோன்—vii. 8.
படிறு—வஞ்சகம்—ii.7.
பாத்தூண்—பகுத்துண்டல்—viii.9.
பிணி—நோய்—viii. 7.
புத்தேள்—கடவுள்—viii. 1.
புலவி—பிணங்குதல்—ix. 5.
புலைமை—நீசத்தன்மை—iv. 6.
பெருமிதம்—செருக்கு—ii. 6.
பேண்—விருப்பம்—iv. 4.
பேரில்—பெருங்குடி—ii. 1.
பொருணசை—பொருளில் விருப்பம்—vii. 9.
மறைவிரி—இரகசியத்தை வெளிப்படுத்தல்— viii. 4.
மாற்றல்—மறுத்தல்—iv. 3.
மீக்குணம்—மேன்மையானவற்றைச் செய்யும் இயல்பில்லாமை வரம்பு கடந்த செய்கையைச்
செய்யும் இயல்பு—iii. 2.
மீப்பு—மேன்மைக் குணம்—iii. 2.
முறை—நீதி முறை—iii. 6 x. 9.
நீதியை மேற்கொண்டு நடத்தல்—vi. 9.
முறையிலரசர்—நடுவு செய்யாத அரசர்—iii. 6.
மேதை—தானாசு ஒன்றை மதியுடைமையான்
அறியும் அறிவு—i. 3.
மேல்வரவு—எதிர்காலத்து வருவது—vii. 5.
மேற்கோள்—மேற்கொள்வது—iv. 5.
யாப்பிலோர்—ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாதார்—iii. 1.
வண்மை—செல்வம்—i. 4.
வள்ளியன்—வண்மையுடையவன்—iii.9.
வாயா—பொருந்தாத—vi. 4.
வாய்ப்பு—பேறு—vi. 3.
வாய்மை—உண்மை—i. 4.
வாலியன்—தூயோன்—பரிசுத்தன்—vii. 10.
விழைச்சு—கலவி—vi. 3, 4.
வீங்கல்—ஆக்கம்—x. 2.
வெய்யோர்—விரும்பினவர்—viii. 1, 3, 4.
வேட்கை—ஆசைப்பெருக்கம்—vii. 9.
வேளாண்மை—உபகாரம்—iv. 8.
Prihted at the S.P.C.K. Press, Vepery, Madras-B.9789