மூவர் சிறப்பு
Appearance
மூவர் சிறப்பு
[தொகு]- மூவர் என்போர் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞான சம்பந்தரும், ஆளுடைய அரசாகிய திருநாவுக்கரசரும், ஆளுடைய நம்பியாகிய திருநாவலூர்ச் சுந்தரரும் ஆவர். அவர்களின் சிறப்பினைப்பேசுவது இப்பகுதி.
- (வெண்பா)
- பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
- காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
- மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
- கரணம்போ லல்லாமை காண். (1)
- என்பைப்பெண் ணாக்கி யிரும்பாலை நெய்தலாய்
- உம்பர் மகிழ்ந்திடவன் றோதியதும் - தம்பிரான்?
- கதவ மடைக்கக் கழறியது மெல்லாம்
- பதிகரண மென்றுணரப் பா. (2)
- அரவங் கடித்திறந்தா னாருயிரை மீட்டுந்
- திருமறைக் காட்டிற்பின் றிறந்தும் - கரமலையை
- நீற்றறையை வேகமற நீராகப் பாடியதுங்
- கூற்றுதைத்தான் போதமெனக் கொள். (3)
- கல்லைப்பொன் னாக்கிக் கடுமுதலை வாய்ப்பிள்ளை
- மெல்ல வழைத்து வெறுக்கையினைச் - செல்லுகின்ற
- ஆற்றிலிட்டு மீட்டு மருங்குளத்திற் கண்டதுவும்
- சாற்றிற் சிவகரணந் தான். (4)
- பார்க்க