மூவர் வரலாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
முதல் திருமுறை, இரண்டாந் திருமுறை, மூன்றாந்
திருமுறைகளைப் பாடியருளியவர்,
திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் ஆவார்.

திருச்சிற்றம்பலம்[தொகு]

திருஞான சம்பந்தர் வரலாறு[தொகு]

(அவர் வரலாறு பற்றிய குறிப்புகள்)

ஞான சம்பந்தர் ஞால மடைதல்
தந்தை யோடு தடாகஞ் செல்லல்
நாத னளித்த ஞானப்பா லுண்ணல்
தோணி யப்பரைச் சுட்டிக் காட்டல்
ஞால முய்ய நற்றமிழ் பாடுதல்
கோலக் காவில் தாளம் பெறுதல்
பாண னாரைப் பரிவுட னேற்றல்
மாறன் பாடியில் சிவிகை யூர்தல்
உலக முய்ய வுபவீத மணிதல்
ஆண்ட வரசருக் கன்ப ராதல் (10)
மழவன் மகளின் முயலக னகற்றல்
அடியவர் நோயை யகற்றி யருளல்
பட்டீசர் அருளாற் பந்தரைப் பெறுதல்
ஆவடு துறையில் அரதனம் பெறுதல்
இசையின் பெருமையை எவர்க்கு முணர்த்தல்
அரவா லிறந்த வணிகனை எழுப்புதல்
திருநா வரசரைத் திரும்பவு மெதிர்கொளல்
வீழி மழலையில் படிக்காசு பெறுதல்
மறைக்காடதனில் கதவம் பிணித்தல்
மானியார் வேண்ட மதுரையை அடைதல் (20)
மடத்தின் வன்னி மன்னனைப் பொருந்துதல்
பாண்டியன் சுரநோய் பற்பத்தால் தீர்த்தல்
எரியிட்ட ஏட்டை எடுத்துக் காட்டல்
ஆற்றி லிட்ட ஏடெதிர் செல்லல்
மன்னன் கூன்போய் மாசில னாதல்
ஆற்றில் ஓடம் அக்கரை செலுத்துதல்
பூதியைப் புத்தர் பொலிவுறப் பூசல்
அப்பர் சுமக்க அஞ்சிப் பதைத்தல்
காயாப் பனையைக் காய்பனை ஆக்கல்
எலும்பைப் பெண்ணாய் எழுப்பித் தருதல் (30)
திருமணஞ் செய்து சிவனடி சேர்தல்
சைவ நற்றுறை தழைத்து வாழ்தல்.
முற்றும்.
மூன்றாந் திருமுறை நான்காம் திருமுறை,
ஐந்தாந் திருமுறைகளைப் பாடியருளியவர்
திருநாவுக்கரசு சுவாமிகள்

அப்பர்/திருநாவுக்கரசர் வரலாறு[தொகு]

(அவர் வரலாறு பற்றிய குறிப்புகள்)
நாவுக் கரசர் ஞால மடைதல்
அறம்பல செய்து அமண்மதஞ் சேர்தல்
தரும சேனராய்த் தலைமை வகித்தல்
சூலி யருளால் சூலைநோயடைதல்
அதிகை யடைந்து அரன்பொடி பூசல்
கூற்றுப் பாடி குடர்நோ யொழித்தல்
உழவா ரங்கொண்(டு) உறுபணி செய்தல்
பல்லவன் சமுகம் பயமின்றிச் செல்லல்
நீற்றறை யதனில் துன்பமற் றிருத்தல்
விடத்தை யருந்தி வெறுப்பற் றிருத்தல்
யானையும் பணியப் பதிக மோதல்
கல்லே மிதப்பாய்க் கடற்கரையணைதல்
பல்லவன் பரமனுக் கடிமை யாதல்
இணையார் தோளில் இலச்சினை ஏற்றல்
சம்பந்த முனியொடு சம்பந்தம் பெறல்
திருவடி முடிமேல் தீட்டப் பெறுதல்
அப்பூதி மைந்தனுக் காருயி ரளித்தல்
கழுமல வேந்தரைக் கலந்தினி திருத்தல்
பொற்பார் மிழலையில் பொற்காசு பெறுதல்
மறைக்கா டதனில் கதவந் திறத்தல்
வாய்மூர் தன்னில் வரதனைக் காணல்
சம்பந்தர் ஏகுதல் தடுத்துக் கூறல்
பழையா றதனில் பரமனைக் காண்டல்
பைஞ்ஞீலி யப்பர் பசிநோய் தீர்த்தல்
காளத்தி கண்டு கயிலைக் கேகுதல்
கைகால் தேய்ந்தும் கவலைகொண்டிருத்தல்
குளத்தில் மூழ்கி யையாறடைதல்
கயிலைக் கோலங் கண்டு களித்தல்
சீகாழி யண்ணலின் சிவிகை தாங்குதல்
சோதனை கடந்து துதிபெற் றிருத்தல்
புகலூர் தன்னில் பொன்னடி சேர்தல்
சைவ நற்றுறை தழைத்து வாழ்தல்.
முற்றும்.


ஏழாந் திருமுறை பாடியருளியவர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்

சுந்தரர்[தொகு]

(அவர் வரலாறு பற்றிய குறிப்புகள்)
ஆலால சுந்தரர் அவனியில் வருதல்
பித்தர் ஓலையைப் பிடுங்கிக் கிழித்தல்
தம்பிரான் றானே தடுத்தாட் கொள்ளல்
வன்றொண்ட னாமம் வாதுபேசிப் பெறல்
அதிகையில் முடிமிசை அரனடி சூட்டல்
அரணார் ஆணையால் ஆரூர் செல்லல்
தம்பிரான் தோழராய்த் தரணியில் உலாவல்
பரமன் அருளால் பரவைதோள் சேரல்
தொண்டர்தம் பெருமை விரன்மிண்ட ராற்றெளிதல்
திருத்தொண்டத் தொகை சிறப்புடன் ஓதல்
குண்டையூர் அன்பர் நென்மலை கொடுத்தல்
அந்நெல் முழுதும் ஆரூர் வருதல்
வனப்பகை சிங்கடிக் கப்பன் ஆதல்
தழுவணை செங்கல் தகுபொன் னாதல்
பொன்னைப் பரவைக் கீந்து மகிழ்தல்
பாச்சிலாச் சிரமத்து பசும்பொன் பெறுதல்
முதுகுன் றத்தில் முழுகன கம்பெறல்
ஆற்றிலிட்டுக் குளத்தில் எடுத்தல்
பசிப்பிணி தீரப் பொதிசோ றுபெறல்
அரனார் மகிழ்வொ(டு) அமுதிரந் தளித்தல்
சங்கரன் அருளால் சங்கிலி யைப்பெறல்
மகிழ்க்கீழ் நின்று மாசப தஞ்செயல்
தொண்டர் கூடித் திருமண முடித்தல்
அன்பின் ஈட்டத்தால் ஆரூர்க்(கு) ஏகுதல்
கண்கள் இழந்து கலங்கி நிற்றல்
வெண்பாக் கத்தில் ஊன்றுகோல் பெறுதல்
கண்ணொன்று பெற்றுக் கச்சியில் அமர்தல்
உத்தமர் அருளால் உடற்பிணி ஒழித்தல்
வலக்கண் பெற்று மனமகிழ்ந் திருத்தல்
பரமனைத் தூது பரவைபால் செலுத்துதல்
ஏயர்கோன் சூலையை எய்தித் தீர்த்தல்
சேர்ரர் பெருமான் தோழ ராதல்
முருகன்பூண்டியில் செல்வம் இழத்தல்
முதலையுண்ட மதலையை அழைத்தல்
வெண்களி றேறி வியன்கயி லைச்செலல்
சைவ நற்றுறை தழைத்து வாழ்தல்.
முற்றும்.

திருச்சிற்றம்பலம்[தொகு]

பார்க்க
அகத்தியர் தேவாரத்திரட்டு
மூவர் வரலாறு
மூவர்புராண சாரம்
மூவர் தோத்திரம்
மூவர் சிறப்பு
நால்வர் சிறப்பு
தேவார மகிமை

[[]] [[]]

இவர் பெயர் சுந்தரர் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மூவர்_வரலாறு&oldid=1419202" இருந்து மீள்விக்கப்பட்டது