மெய்யறம் (1917)/சமர்ப்பணம்
Jump to navigation
Jump to search
சமர்ப்பணம்.
உலக மனைத்தினு மொளிமிக வுடைய நாவலந்
தீவெனு மாவல மகளின்
முகமென விளங்கும் பரதகண் டத்தின்
செவ்விய நுதலாஞ் செந்தமிழ் நிலத்தின்
திலகமாமென விலகுபுன னாட்டின்
செஞ்சொலார் பெருகுந் தஞ்சைமா நகரில்
தாளாண்மை செய்து வேளாண்மை புரியும்
கார்காத் தாருட் சீர்மிக வாய்ந்த
நற்குடிப் பிறந்து பொற்புற வளர்ந்து
தமிழுமாங் கிலமுஞ்சால்புறக் கற்று
நடுவு புரிந்து நற்புகழ் பெருக்கி
இராசாங் கத்தார் இராவ்பக தூரெனும்
பட்டம் வழங்கப் பண்புடன் பெற்றுத்
தமிழினை வளர்த்துத் தமிழ்நா டளிக்கும்
வலனார் சீனி வாச பிள்ளை
யவர்க ளீகை யாதிய நற்செயல்
கண்டுள மகிழ்ந்தவர் கட்குத்
தகவொடு மெய்யறம் சமர்ப்பித் தேனே.
வ. உ. சிதம்பரம்.