விக்கிமூலம் பேச்சு:ஆலமரத்தடி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வணக்கம், நிகண்டியம் திட்ட பங்களிப்பாளராக உள்ளேன். விக்கிமூலம் பயனருக்கு எளிய வடிவில் இல்லாதது போல தோன்றுகிறது(user friendly). என்னைப் போல அடிப்படை கணிணி அறிவை கொண்டவர்களுக்கு விக்கி மூலத்தை எளிதாக பயன்படுத்த உதவும் வகையில் செயலி ஏதேனும் உள்ளதா??.அல்லது கணினி யின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் அடிப்படையை கற்றால் (எடுத்துக்காட்டாக ஏதேனும் கணினி மொழி) எளிதாக இருக்குமா??. பயிற்சி பட்டறைகள் நடத்தும் திட்டம் ஏதும் இருந்தால் திருச்சியில் நடத்தினால் நிகண்டியம் திட்டத்தில் இணைந்திருக்கும் திருச்சி தஞ்சை கரூர் சேர்ந்தவர்கள் பங்கேற்க ஏதுவாக இருக்கும். எத்தனை பேர் பங்குபெற இயலும் என்று நிகண்டியம் திட்ட புலனம் குழு வாயிலாக திரு நீச்சல்காரன் வசம் தெரிவிக்கிறோம்.

@Sudhahar Sambamoorthyrao: நல்லது. மிகவும் குறைந்த பங்களிப்பவர்களே ஆர்வம் காட்டியதால், புதியவர்களையும் சேர்த்துப் பயிற்சிப் பட்டறை அமைக்க முயல்கிறேன்.-Neechalkaran (பேச்சு) 09:40, 6 டிசம்பர் 2019 (UTC)