விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2/முன்பதிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

@Rajendran Nallathambi, TVA ARUN, Aarlin Raj A, Info-farmer, Fathima Shaila, Victory-King, பிரபாகரன் ம வி: முன்பதிவு என்பது கட்டாயம் கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1. இது இந்திய அளவிலான விதி இல்லை. 2. இது விக்கிப்பீடியா போன்று கட்டுரை எழுதுவது அல்ல ஒரு பக்கம் மெய்ப்பு பார்ப்பதற்கு அதிகபட்சம் 2-3 நிமிடங்களே எடுத்துக்கொள்ளப்படும். இதனால் ஒரே பக்கத்தினை இருவர் தொகுப்பது என்பது அரிது. மேலும், இங்கு இங்கு மிக அதிகபட்சமாக 20 பக்கங்களைத் தான் முன்பதிவு செய்யச் சொல்லி இருந்தோம். ஆனால் இங்கு ஒரு பயனர்கள் ஒரு /இரு நூல்களை முழுவதும் முன்பதிவு செய்வது என்பது ஏற்புடையது அல்ல. இப்படிச் செய்தால் மற்ற பயனர்களுக்கு மெய்ப்பு பார்க்க நூல்களே கிடைக்காமல் போகும். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். Sridhar G (பேச்சு) 12:39, 31 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

இன்னொரு விடயம் இதில் ஒருவர் மெய்ப்பு பார்க்க வேண்டும் எனில் முதலில் நூலினைத் தேர்வு செய்ய வேண்டும் பின்னர் யாராவது முன்பதிவு செய்துள்ளார்களா எனப் பார்க்க வேண்டும். இது காலவிரயம். ஏற்கனவே கூறியுள்ளது போல இது கட்டுரைப் போட்டி அன்று ஒருவர் மெய்ப்பு பார்த்தால் அது வண்ணம் மாறிவிடப் போகிறது. எனவே, முன்பதிவு கட்டாயம் அல்ல. Sridhar G (பேச்சு) 12:42, 31 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
நீங்களே கூறி விட்டீர்கள். முன்பதிவு என்பது கட்டாயமல்ல. பொதுதளத்தில் நான் உடப்ட்ட, அறிவிப்பு வெளியான நாள் முதல், முன்கூட்டியே நூல்களுக்கு பொதுவத்தில் உரிம இடர்களை களைவது முதல் பல மாற்றங்களை செய்து உள்ளோம். தற்பொழுது பயணிப்பவர்கள் அதனை அறியாமல் கட்டுப்பாடு என்று நினைத்துக் கொள்வது அவர்களது அறியாமை. நாட்டுடைமை நூல்கள் அனைத்தும் பொதுவுரிமையின் கீழ் வருகின்றன. அவற்றில் இருந்து தேரந்தெடுத்து, OTRS குறித்து மேல்நிலை விக்கியில் வினவி செயற்பட வேண்டும் என்றே எண்ணுகிறேன். அவர்கள் பதிலுக்கு ஒப்ப செயற்படலாம். தற்போதுள்ள நூல்களில் செயற்படக்கூடாது என்று யாரும் இங்கே சொல்லவில்லை. தொடர்ந்து ஒரு நூலை படிக்கவும், மெய்ப்புக்காணவும் விருப்பம் தெரிவித்துள்ளனர், அவ்வளவே. மேலும், இங்குள்ள நூற்பட்டியலில் பெயர்குறிப்பிடா நூல்கள் உள்ளன. அவற்றினை ஏன் பிறர் தேர்ந்தெடுக்கவில்லை என்பது புரியவில்லை. இனி இத்தகையத் துணைபிரிவு எதிலும் இருக்காபடி அடுத்த நிகழ்வில் இருந்து செயற்படுவோம்.--தகவலுழவன் (பேச்சு). 03:35, 1 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]